பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 475

ஒற்றர் உரைத்தல்
 

6803.

'அடியம் அந் நெடுஞ் சேனையை ஆசையால்

முடிய நோக்கலுற்றேம்; முது வேலையின்

படியை நோக்கி, எப் பாலும் படர்குறும்

கடிய வேகக் கலுழனின் கண்டிலம்
 

அடியம்-   (உன்)   அடியேம்   ஆகிய   நாங்கள்;  அந்
நெடுஞ்சேனையை 
-  அந்த  நீண்ட   (குரங்குச்)  சேனையை;
ஆசையால்- (மனங்கொண்ட)  விருப்பத்தால்; முடிய நோக்கல்
உற்றோம்
   -   முழுவதும்    நோக்கத்      தொடங்கினோம்;
முதுவேலையின்  படியை   நோக்கி  -  பழமையான கடலின்
எல்லையைக்  காணுமாறு;  எப்பாலும்  படர்குறும்  - எல்லாப்
பக்கங்களிலும் பார்த்தல்  பொருந்திய; கடிய  வேகக் கலுழனின்
- கடுமையான வேகம் பொருந்திய கருடனைப் போன்று;கண்டிலம்
- காண இயலாதவர்கள் ஆனோம்.
 

(58)
 
 

6804.

'நுவல, யாம் வர வேண்டிய நோக்கதோ?

கவலை-வேலை எனும், கரை காண்கிலாது

அவலம் எய்தி அடைத்துழி, ஆர்த்து எழும்

துவலையே வந்து சொல்லியது இல்லையோ?
 

நுவல யாம் வரவேண்டிய நோக்கதோ?- பகைப்படையின்
அளவு ஆற்றல் முதலியவற்றை நாங்கள் வந்து  உமக்கு உணர்த்த
வேண்டிய தேவையுமுள்ளதோ? கவலை, வேலை எனும் கரை- ;
(அவ்வானர     வீரர்கள்)     கவலைக்கடலின்     கரையினைக்
காண்கிலாது- காண இயலாது;அவலம் எய்தி- துயரம் முழுவதும்
அடைந்து;   அடைத்துழி -  (இறுதியில்  வழி  கண்டு) கடலை
அடைத்தபோது;  ஆர்த்து  எழும்  துவலையே  -  (மலைகள்
வீழ்ந்ததனால்  இலங்கையில்)  ஆர்ப்பரித்த   துளிகளே;   வந்து
சொல்லியது இல்லையோ?
- (அவர்கள்   ஆற்றலை)  (உமக்கு)
வந்து சொல்லிவிட்டது இல்லையோ? 
 

(59)
 

6805.

' "எல்லை நோக்கவும் எய்திலதாம்" எனும்
சொல்லை நோக்கிய மானுடன், தோள் எனும்
கல்லை நோக்கி, கணைகளை நோக்கி, தன்
வில்லை நோக்கவும், வெந்தது வேலையே.