பக்கம் எண் :

478யுத்த காண்டம் 

6809.

'பற்றி, வானர வீரர் பனைக் கையால்,
எற்றி எங்களை, ஏண் நெடுந் தோள் இறச்
சுற்றி, ஈர்த்து அலைத்து, சுடர்போல் ஒளிர்
வெற்றி வீரற்குக் காட்டி, விளம்பினான்.
 

வானர வீரர்- குரங்கின வீரர்கள் உதவியால்; எங்களைப்
பனைக்கையால்  பற்றி
  -  எங்கள் இருவரையும் பனை மரம்
போன்ற கரங்களால்  பற்றி; ஏண் நெடுந்தோள் இறச்சுற்றி-
பெரிய நீண்ட தோள்கள்  முறியுமாறு சுற்றி; ஈர்த்து அலைத்து
-  இழுத்துச்  சுழல  விட்டு;  சுடர்  போல்  ஒளிர் வெற்றி
வீரற்குக்காட்டி- சூரியன் போல் ஒளிர்கின்ற விசய ராகவனுக்கு
எங்களைக்  கொண்டு   போய்க்காண்பித்து;  விளம்பினான் -
(நாங்கள் யார் என்று) வீடணன் கூறினான்.
 

பனை - கைகளின் பருமைக்கும் உரத்துக்கும் உவமை.

 (64)
 

6810.

' "சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தானுடை 
வரங்கள் சிந்துவென்" என்றனன்; மற்று எமைக்
குரங்கு அலாமை தெரிந்தும், அக் கொற்றவன் 
 இரங்க, உய்ந்தனம்; ஈது எங்கள் ஒற்று' என்றார். 
  

அக்கொற்றவன்  -  அந்த  வெற்றி  வீரனாகிய  இராமன்;
இங்கு  சரங்கள் இவற்றால் - இங்குள்ள இந்த அம்புகளினால்;
தான் பண்டு உடை வரங்கள் சிந்துவென் என்றனன்- முன்பு
இராவணன்  பெற்றுள்ள வரங்களையெல்லாம் அழிப்பேன் என்று
எம்மிடம் கூறினான்; மற்று - மேலும்; எமை குரங்கு அலாமை
தெரிந்தும்
- நாங்கள்  ஏமாற்றக்  குரங்கு வேடம் கொண்டோர்
உண்மையில் குரங்குகள் அல்லோம் என்பது  தெரிந்தும்; இரங்க
உய்ந்தனம்
- எங்கள்பால்  இராமன்  காட்டிய  கருணையினால்
பிழைத்து  வந்தோம்;ஈது எங்கள்  ஒற்று என்றார் - இதுவே
நாங்கள் ஒற்றறிந்து வந்தது என்று சொன்னார்.
 

தாம் உயிர் பிழைக்கவிட்ட இராமனின் கருணைப் பெருக்கை
மறவாமல்   அவன்   எதிரிமுன்   உரைக்கும்    மாண்பினைப்
போற்றலாம். முன்பு சீதை  கூறிய சொற்கள்  (5188, 5189) இங்கு
நினைக்கத்தகும். 
 

(65)
 

6811.

மற்றும் யாவையும், வாய்மைய வானவன் 

சொற்ற யாவையும் சோர்வு இன்றிச் சொல்லினார்;