| 'குற்றம் யாவையும் கோளொடு நீங்குக ! |
| இற்றை நாள் முதல் ஆயு உண்டாக !' என்றார். |
| |
மற்றும் யாவையும் - அங்கு நடந்த பிற செய்திகள் யாவற்றையும்; வாய்மைய வானவன்- உண்மையையுடைய தேவனாகிய இராமபிரான்; சொற்ற யாவையும் - (இராவணனிடம் சொல்க எனச்) சொல்லிய யாவற்றையும்; சோர்வின்றிச் சொல்லினார் - மறவாமல் சொன்னார்கள் ஒற்றர்கள்; இற்றை நாள் முதல் - மேலும், இன்றைய நாள் தொடங்கி; கோளொடு குற்றம் யாவையும் நீங்குக - தீமையோடு கூடிய குற்றங்கள் யாவையும் உன்னிடமிருந்து நீங்குவன ஆகுக! ஆயுஉண்டாக என்றார்- உன் வாழ்நாள் வளர்வதாகுக என்று வாழ்த்தினர். |
சோர்வு -மறதி. தளர்ச்சியுமாம். இராமன் வெகுளும் அளவு தீமை புரிந்துள்ளான் என உணர்ந்த ஒற்றர்கள், இன்று முதல் அக்குற்றங்கள் நீங்குக என்று குறிப்பாக உணர்த்தினர். கோள் - கொள்ளுதல். இராவணன் அழிவனோ என்ற அச்சத்தால் அவனை ஒற்றர் வாழ்த்தியதைப் பாண்டியனின் வாயில் காவலன் பலமுறை வாழ்த்திய சிலப்பதிகாரச் செய்தியோடு ஒப்பிட்டுணர்க. |
(66) |
சேனை காவலன் உரை |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
6812. | ' "வைதெனக் கொல்லும் விற் கைமானிடர், மகர |
| நீரை |
| நொய்தினின் அடைத்து, மானத் தானையான் |
| நுவன்ற நம் ஊர் |
| எய்தினர்" என்ற போதின் வேறு இனி எண்ண |
| வேண்டும் |
| செய் திறன் உண்டோ?' என்னச் சேனை |
| காப்பாளன் செப்பும்: |
| |
வைது எனக் கொல்லும் - பெரியோர் இட்ட சாபம் போல் (தப்பாமல் உடனே) கொல்லவல்ல; விற்கை மானிடர்- வில்லைக் கையில் ஏந்திய மனிதர்கள்; மகர நீரை- மகர மீன்கள் உலாவும் கடல் நீரை; நொய்தினின் அடைத்து- எளிதாக அடைத்து; மானத் தானையான்- வீரமிக்க படையோடு; நுவன்ற நம்மூர் எய்தினர்- |