பக்கம் எண் :

480யுத்த காண்டம் 

கூறப்படும்   நம்   இலங்கை   மாநகரை   அடைந்து  விட்டனர்;
என்றபோதின்  -  என்றாகிவிட்ட   இந்தப்  பொழுதில்;  வேறு
இனி எண்ண வேண்டும்
- போருக்குப் புறப்படல் அன்றி வேறு
இனி நாம் சிந்திக்க வேண்டும்; செய்திறன் உண்டோ- செயல்கள்
(எவையேனும்) உள்ளனவோ? என்ன- என்று இராவணன் வினாவ;
சேனை   காப்பாளன் -  சேனைக்குக்  காவலன்;  செப்பும்-
உரைக்கத் தொடங்குவான்.
 

முன்பு    (53)     சேனை     காவலன்     உரையாற்றிக்
கொண்டிருக்கும்போது     இடையே     ஒற்றர்கள்    வருகை
உரைக்கப்பட்டதால்  தடைப்பட்ட  அவன்  உரையைத் தொடர
வாய்ப்பளிக்கின்றான்    இராவணன்   என்க.   நாடகபாணியில்
கதையினை  நடத்திச் செல்லும்  கம்பர் பெருமானின் திறத்திற்கு
இப்பகுதி மேலும்  ஒரு  சான்று. அருளில் கூறினும் வெகுளியில்
கூறினும்  கூறிய  பொருளை அப்போதே பயந்துவிடும் (திருக்கு.
பரிமே.  28)  திறனுடையவை.  நிறைமொழி  மாந்தர்  சொற்கள்
ஆதலின், "வைதெனக்  கொல்லும்  வில்"  என்றார். வைதல் -
சாபமிடல். "சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்" (388) எனவும்,
"வைவன முனிவர்  சொல்  அனைய  வாளிகள்" (7841) எனவும்,
"வைதால் அன  வைதாயின வடிவாளி" (7177) எனவும் வில்லின்
வேகத்திற்கும், தப்பாமற்  சாய்ப்பதற்கும் சான்றோர் சொல்லைக்
கவிஞர்    உவமையாக்கியிருப்பது   காணலாம்.    "வைதெனக்
கொல்லும் விற்கை மானிடர்" என அவனை அறியாமல் உரைத்து
விட   நேர்ந்தது. ஒற்றர்  உரைத்த  உரையின்  தாக்கம் அவன்
உளத்தை நிலை குலையச் செய்ததனால் என்க. 
 

(67)
 

6813.'விட்டனை மாதை என்ற போதினும், "வெருவி,

 வேந்தன்

பட்டது" என்று இகழ்வர் விண்ணோர்; பற்றி, இப்

 பகையைத் தீர

ஒட்டல்ஆம் போரில், ஒன்னார் ஒட்டினும், உம்பி

ஒட்டான்;

கிட்டிய போது, செய்வது என் இனிக் கிளத்தல் 

வேண்டும்?

 

மாதை  விட்டனை  என்றபோதும் - சீதையை விடுதலை
செய்தாய் என்றாலும்; வேந்தன்  வெருவிப்பட்டது- இலங்கை
வேந்தனாகிய  இராவணன் பகைவனுக்கு அஞ்சிச் செய்த செயல்
(இது) என்று விண்ணோர் இகழ்வர்- என்று கூறி (உன்