பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 481

பகைவர்களான)   தேவர்கள்   இகழ்ந்து  பேசுவர்;பற்றி
அவ்வாறு  விடாமல்; இப்பகையைத்  தீர  - இப்பகைமையைத்
தீர்த்துக்   கொள்ள;   போரின்  -    போரில்;  ஒட்டலாம்-
சமாதானமும்   செய்து   கொள்ளலாம்;  (ஆனால்)   ஒன்னார்
ஒட்டினும்
  - அதற்குப்  பகைவர்கள்  உட்பட்டாலும்; உம்பி
ஒட்டான்
- உன்  தம்பியாகிய வீடணன் உடன்படான்; கிட்டிய
போது
- போர் நெருங்கி வந்துவிட்ட இந்தப் பொழுதில்;செய்வது
என் 
-  நாம் செய்யத்தக்கது என்ன (என்று); இனிக் கிளத்தல்
வேண்டும் - (வேந்தனாகிய நீயே) எங்கட்கு இனி ஆணையிடல்
வேண்டும். 
 

(68)
 

6814.'ஆண்டுச் சென்று, அரிகளோடும் மனிதரை அமரில்

கொன்று,

மீண்டு, நம் இருக்கை சேர்தும் என்பது

 மேற்கொண்டேமேல்,

ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது, உறுதி,

 உண்டோ?

வேண்டியது எய்தப் பெற்றால், வெற்றியின் விழுமிது

அன்றோ?

 

ஆண்டு சென்று - பகைவர் இருக்கும் இடத்திற்கே சென்று;
அரிகளோடும் மனிதரை -  வானரப்படைகளோடு அம்மானிடர்
இருவரையும்; அமரில்  கொன்று -  போர்  செய்து   கொன்று;
மீண்டு  நம்  இருக்கை  சேர்தும்- மீளவும்  நம் இருப்பிடம்
சேர்வோம்;என்பது மேற்கொண்டேமேல்- என்று முன்பு முடிவு
மேற்கொண்டோமெனின்;  ஈண்டு  வந்து  இறுத்தார் - (இன்று,
அப்பகைவர்களே)  இங்கு  நம்மை   நோக்கி    வந்தடைந்தார்;
என்னும் ஈது அலால் உறுதியுண்டோ?- என்கின்ற இச்செய்தி
யல்லால்  நமக்கு  இப்போது  உறுதி  தரும்  செய்தி உண்டோ?
வேண்டியது எய்தப் பெற்றால்- (நாம் வேண்டியது இதுவேயாம்)
நாம்  விரும்பியதே  கிடைக்கப்  பெற்றோம்.  என்றால்;   (அது)
வெற்றியின் விழுமிது அன்றோ? - நாம் இனிப் பெறவிருக்கும்
வெற்றியிலும் சிறந்தது அன்றோ?
 

பகைவர் இருக்குமிடம் நோக்கிச் சென்று தாக்குதல் நடத்திக்
கொல்வோம்  என்று  முன்பு   இராவணன்  மந்திரப் படலத்தில்
(27, 37, 41)