பேசப்பட்டது. இப்போது அவர்களே இங்கு வந்துவிட்டார்களென்றால் நமக்கு மிகவும் வசதிதானே? இனிப் போர் செய்து வெல்லவேண்டியது தானே என்பது கருத்து."நெடும் புனலுள் வெல்லும் முதலை, அடும்புனலுள் நீங்கின் அதனைப் பிற" (குறள் 495) என்பவாகலின், நம்மிடம் நோக்கி அவர் வந்துள்ளது நமக்குப் பேருறுதி பயக்கும் என்பான், "ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அல்லால் உறுதியுண்டோ?" என்றான். பகைவர்களை நம் எல்லைக்குள் கொண்டுவரல் நமக்கு வெற்றி. அது கிட்டி விட்டது. வெற்றிக்குப் பின் கிட்ட வேண்டிய பயன் இப்போதே கிட்டி விட்டதாதலின் "வெற்றியின் விழுமிது அன்றோ?" என்றான். |
(69) |
6815. | 'ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்தம் தானை, ஐய! |
| தேயினும், ஊழி நூறு வேண்டுமால்; சிறுமை |
| என்னோ? |
| நாய்இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால், |
| நீ உருத்து எழுந்த போது, குரங்கு எதிர் நிற்பது |
| உண்டோ? |
| |
ஐய! - ஐயனே! ஆயிரம் வெள்ளம் ஆன - ஆயிரம் வெள்ளம் என்னும் எண்ணிக்கை கொண்ட; அரக்கர் தம் சேனை- அரக்கர்களுடைய சேனையானது; தேயினும் நூறு ஊழிவேண்டும் - (பகையால்) அழிவதானாலும் நூற்றுக்கணக்கான ஊழிக் காலங்கள் வேண்டியிருக்கும்; சிறுமை என்னே?- (அப்படியிருக்கவும்) தாழ்வுணர்ச்சி நமக்கு எதற்காக? நீ உருத்து - நீ வெகுண்டு; எழுந்தபோது - (போருக்கு) எழுகின்ற போது; நாய் இனம் - நாய்களின் கூட்டம்; சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்- சிங்கத்தைக் கண்டது என்னுமாறு (திசை கெட்டு) ஓடிச் சிதைவது அன்றி; குரங்கு எதிர் நிற்பது உண்டோ? - இக்குரங்குகள் எதிர் நிற்கும் தரம் உடையனவோ? (இல்லையென்றபடி) |
வெள்ளம் - படையளவு குறிக்கும் பேரெண். இதன் விளக்கத்தினை 3831 ஆம் பாடல் உரையில் காண்க. அரக்கர் சேனை ஆயிரம் வெள்ளம் கொண்டது என்பது இதனால் புலப்படும். வானரச் சேனை எழுபது வெள்ளம் மட்டுமே கொண்டது என்பது. வெள்ளம் ஏழு பத்து உள (3831) "எழுபது வெள்ளம் சேனை வானரர்" (10235) என்பதனால் அறிக,. அரக்கர் படை அழிந்தது என்று வைத்துக்கொண்டாலும் யுகங்கள் நூற்றுக்கணக்காக ஆகும். இந்த ஆயிரம் வெள்ளமும் அழிய, நூற்றுக்கணக்கான யுகங்கள் ஆகும் எனப் படையின் பெருமையும் வீரமும் ஒருங்கே சுட்டுவான், "தேயினும் ஊழி நூறு வேண்டும்" |