பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 483

என்றான். இக்கணக்கை  வீடணன் இராம பிரானுக்கு மொழிவதும்
காண்க.  சிங்கம்  நாய்  இனத்தோடு  போரிடத்  தேவையில்லை.
சிங்கம் எழுவதே அவை சிதறி  ஓடப்போதுமானது என்பான். "நீ
உருத்து  எழுந்த   போது   குரங்கு எதிர்  நிற்பது  உண்டோ?"
என்றான்.  

(70)

 

6816. 

'வந்தவர் தானையோடு மறிந்து, மாக் கடலில்

வீழ்ந்து,

சிந்தினர் இரிந்து போக, சேனையும் யானும் சென்று,
வெந் தொழில் புரியுமாறு காணுதி; விடை ஈக!'

என்னா,

இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏயச்

சொன்னான்.

  

வந்தவர்  -  (நம்மை எதிர்த்துப் போரிட) வந்தவர்களாகிய
இராம  இலக்குவர்;  தானையோடு   மறிந்து -  (அவர்களின்)
வானரப்படையோடு  திரும்பி;  மாக்கடலில் வீழ்ந்து - பெரிய
கடலில்   விழுந்து; சிந்தினர்   இரிந்து போக  - சிதறுண்டு
அஞ்சி ஓடும்படி; சேனையும் யானும் சென்று- நம் சேனையும்
நானும் ஆகப்  போய்; வெந்தொழில்  புரியுமாறு  காணுதி-
கடுமையான போர்ச் செயல்கள் செய்யுமாறு காண்பாயாக; விடை
ஈக
-  விடை தந்தருள்க; என்னா - என்று; இந்திரன் முதுகு
கண்ட   இராவணற்கு 
-  தேவர் தலைவனாகிய இந்திரனைப்
புறமுதுகிட்டு   ஓடும்படி   களங்கண்ட   இராவணனுக்கு; ஏயச்
சொன்னான்
-  பொருந்துமாறு  (சேனைத்தலைவன் பிரகத்தன்)
கூறினான்.
 

சிந்தினர் - முற்றெச்சம். என்னா - என்று. செய்யா என்னும்
எச்சம். இந்திரனைப்  புறமுதுகு  கண்டவன் இராவணன்: அமரர்
கணத்தொடும்  அடர்ந்த  போர்த்தானை  இந்திரனைப் பொருது
அவனைப்  போர்  தொலைத்து   வேர்த்தான்  (2834) எனவும்,
"மீளா  நிறத்து  ஆயிரங்  கண்ணவன் விண்ணின் ஓட வாளால்
ஒறுத்தான்"  (3432)   எனவும்   வருதல்   காண்க. இடிப்பாரை
யில்லாத ஏமரா  (குறள் 448)  மன்னன்  இராவணன்  ஆதலின்,
அவனுக்கு        இனிப்பானவற்றையே      சொல்லுகின்றான்
படைத்தலைவன் என்பார். "இராவணற்கு ஏயச் சொன்னான்"
என்றார்.
 

(71)

  

மாலியவான் பேச்சு  

 

6817.  

மதி நெறி அறிவு சான்ற மாலியவான், 'நல் வாய்மை
பொது நெறி நிலையது ஆகப் புணர்த்துதல் 

புலமைத்து 'என்னா,