| 'விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும், |
| மீண்டு |
| செது நெறி நிலையினாரே' என்பது தெரியச் |
| சொல்லும்: |
| |
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் - யாவராலும் மதிக்கத்தக்க அறநெறியிற் செல்லும் அறிவு நிறைந்த மாலியவான்; நல்வாய்மை- சிறந்த சத்திய வாசுங்கள்; பொது நெறி நிலையது - உலகிற்குப் பொதுப்படக் கூறியுள்ளவை; ஆகப் புணர்த்துதல் புலமைத்து - (ஆனாலும்) (அவற்றை) தம் வாழ்விற்கேற்குமாறு கூட்டிப் பயன்கொள்ளுதலே அறிவுடைய வழி; என்னா - என்று எண்ணி; விதி நெறி நிலையது- விதிவழியால் பகைவர்கள் அழிய எதிர் நிற்பது; ஆக விளம்புகின்றோரும்- என்று விளம்புகின்ற பிரகத்தன் முதலியோரும்; ஈண்டுச் செது நெறி நிலையினோரே என்பது தெரியச் சொல்லும்- இங்கு அழியும் நெறியில் (செல்ல) நிற்பவரே என்பதனை (இராவணனுக்கு) விளங்குமாறு சொல்லத் தொடங்குவான். |
சேற்றிற் பிறந்த செந்தாமரை போன்று, இலங்கையில் அறம் உரைக்கும் திறம் வாய்ந்தவன் என மதிக்கத்தக்க அறிவு சான்றவன் ஆதலின், "மதி நெறி அறிவு சான்ற மாலியவான்" என்றார். ஆகப் புணர்த்துதல் - நமக்கு' ஆகுமாறு கூட்டிக் கொள்ளுதல். புலமைத்து - அறிவின் பாலது. செதுத்தல் - சிதைவுறல், அழிதல், செத்தை என்பதும் காண்க. |
(72) |
6818. | ' "பூசற்கு முயன்று நம்பால், பொரு திரைப் புணரி |
| வேலித் |
| தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக, |
| மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் |
| தோன்றும் |
| ஈசற்கும் ஈசன் வந்தான்" என்பதோர் வார்த்தை |
| இட்டார். |
| |
மாசு அற்ற சோதி வெள்ளத்து- களங்கம் அற்ற தூய ஒளி வெள்ளத்தின்; உச்சியின் வரம்பில் தோன்றும்- பரம பதம் எனும் பெருவெளியின் எல்லையில் காட்சிப் படுபவனாகிய; ஈசற்கும் ஈசன்- தெய்வத்திற்கெல்லாம் தெய்வமாகிய முழுமுதற் கடவுளே; பொருதிரைப் புணரிவேலி - தரையினை ஓயாது தாக்குகின்ற |