பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 485

அலைகளையுடைய   கடலினை எல்லையாகவுடைய; தேசத்துக்கு
இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக
- பூமிக்குத் தலைவனான
தசரதன்  மைந்தனாக;  பூசற்கு முயன்று  வந்தான் - நம்முடன்
போரிட முயன்று (அவதாரம்  எடுத்து) வந்துள்ளான்; என்பது ஓர்
வார்த்தை  இட்டார்
- என்கின்ற   ஒரு வார்த்தையை (பலரும்)
பேசிக் கொள்கின்றனர்.
 

தசரதன்   என்பது  மோனையின்பத்திற்காகத் தெசரதன் என
வந்தது. பரமபதத்தின்  நாயகன்  ஒரு  சிறுவனாய்ப் பிறந்துள்ளது
நம்மைப் போரிட்டு அழிப்பதற்காக என்று பேசிக் கொள்கிறார்கள்.
சிந்திப்பது  உன்  கடன்  என  அறிவுறுத்துகின்றான் மாலியவான்.
பிரபஞ்ச  வெளியில்  உன் இலங்கைத்  தீவு ஒரு சிறு புள்ளியாம்
என்று சொல்லாமற் சொல்லிச் சிந்திக்க வைக்கின்ற  திறம் காண்க.
கர்ம பூமிபோலே தமியாயிருக்கையன்றிக்கே தெளிவிடும்பாயிருக்கை"
(ஸ்ரீ  வைகுண்ட  கத்யம். சூரணை: 3) யாகையாகிய பரம பதத்தை
"மாசற்ற  சோதி வெள்ளம்" என்றார்.  நித்திய  விபூதியெனப்படும் 
பரமபதம்,  "ஆத்மாவையும்    அறிவையும்   போலே    தானே
பிரகாசிப்பது.  அதனால்,  சுயம்பிரகாசம்,  ஞானமயம்,  அஜடம்"
(யதீந்திர மததீபிகை - காரிகாவளி, நித்யவி, பிர்.)  எனப்படுவதால்
அதனை,  "மாசற்ற  சோதி"  என்றார்  எனினுமாம். அந்த  நித்ய
விபூதியில் ஸ்ரீ  வைகுண்டம்  என்னும்  பெயருள்ளதொரு பெரிய
திவ்யநகரம்    பன்னிரண்டு    ஆவரணங்களாலே   (மதில்கள்)
சூழப்பெற்றதாய்   விளங்குகின்றது.   அதன்   உச்சியில்  உள்ள
திருவோலக்க   மண்டபத்தில்    இறைவன்  கொலுவீற்றுள்ளான்
(மேற்படி  நூல்:  பகச 14)  என்பது  பற்றி, "சோதி   வெள்ளத்து
உச்சியின் வரம்பில் வைகும் ஈசற்கும் ஈசன்" என்றார் எனினுமாம்.
கவந்தன்   வாயிலாய்   (3686) இப்பரம  பதமாட்சியைக்  கவிஞர்
பிரான் உரைத்துள்ளதும் ஒப்பு நோக்கல்  ஆகும். ஈசற்கும் ஈசன்
- தேவாதி தேவன்.

 (73)
   

6819. 

'அன்னவற்கு இளவல்தன்னை, "அரு மறை, 'பரம்' 

என்று ஓதும்

 

நல் நிலை நின்று தீர்ந்து, நவை இலா

உயிர்கள்தோறும்

 

தொல் நிலை பிரிந்தான் என்னப் பல வகை நின்ற 

தூயோன்

 

இன் அணை"என்ன யாரும் இயம்புவர்; ஏது யாதோ?
  

அன்னவற்கு இளவல் தன்னை- அந்தத் தசரத குமாரனாகிய
இராமனின்  தம்பியாகிய  இலக்குவன்; அருமறை- உணர்தற்கரிய
வேதங்கள்யாவும்;   பரம்   என்று  ஓதும்  நன்னிலை நின்று
தீர்ந்து