பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 487

அவ்வவர்க்கு -  அந்த  இராம இலக்குவர்க்கு; அமைந்த
வில்லும்
-  பொருந்திய  விற்படைகளும்; குலவரைஅவற்றின்
ஆன்ற
-  சிறந்த  மலைகளின்  கண்  உள்ள; வெவ்வலிவேறு
வாங்கி
- கொடிய   வன்மையைத்   தனியாகப்   பிரித்தெடுத்து;
விரிஞ்சனே   மேல் நாள்  விதித்த -  நான்முகனே  முன்பு
செய்தமைத்தன; செவ்வழி  நாணும்  சேடன்-  அவ்வில்லில்
நேரிய   நெறியிற்   கட்டப்பட்ட   நாண்  கயிறும் ஆதிசேடன்;
தெரிகணை   ஆகச்   செய்த  -  ஆய்ந்தெடுத்த அம்பாகச்
செய்யப்பட்ட;  கவ்வு  அயில் - கவ்வும்  தன்மையுள்ள கூரிய
முனையும்;   கால    நேமிக்    கணக்கையும் கடந்தது-
காலச்சக்கரத்தின் கணிக்கும் தன்மையையும்  மீறியது;  என்பார் 
- என்று மொழிவர்.
   

குலவரை - சிறந்த மலை. குலம்  சிறப்புக் குறித்து நின்றது.
அவற்றின் வலிமையை மட்டும் பிரித்தெடுத்துச் செய்யப்பட்டன.
இருவர்  விற்களும்  என்பது  கருத்து. "துளக்கலாகா நிலையும் 
தோற்றமும்" (நன். பொதும்)  மலைக்குரியன  வாதலின், இருவர்
வில்லும்   அத்தகைய   ஆற்றல்  உடையனவாயின. அயில் - 
அம்பின்கூர்  முனை. காலநேமி  - காலசக்கரம். காலச்சக்கரம்
தடையற்று   எவ்விடத்தும்   ஊடுருவிச்  செல்வது  போன்று,
அவர்தம் அம்பு முனையும் எங்கும் எவர்மாட்டும் தடையின்றிப்
பிளந்து செல்லும் என்பான், "காலநேமிக் கணக்கையும் கடந்தது"
என்றான்.  கால  நேமி   என்பது,  எதிர்த்தார்க்கு இறுதியைக்
காட்ட  வல்ல  திருமாலின் சுதர்சனச்  சக்கரத்தைக்  குறித்தது
எனினுமாம். 
   

(75)
  

6821. 

' "வாலி மா மகன் வந்தானை, "வானவர்க்கு

இறைவன்" என்றார்;

நீலனை, "உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன்"

என்றார்;

 

காலனை ஒக்கும் தூதன், "காற்று எனும் கடவுள்"

என்றார்;

 

மேலும் ஒன்று உரைத்தார், "அன்னான் விரிஞ்சன்

 

ஆம், இனிமேல்" என்றார்.

  

மா  வாலி  மகன்  வந்தானை  -  பெருமை பொருந்திய
வாலிக்கு மகனாகப் பிறந்த அங்கதனை; வானவர்க்கு இறைவன்
என்றார்
  -  வானத்துத்   தேவர்கள்  தலைவனான  இந்திரன்
என்றார்கள்; நீலனை  உலகம்  உண்ணும்   நெருப்பினுக்கு
அரசன்   என்றார்
-  நீலனை,  ஊழிக்காலத்தே  உலகத்தை
அழிக்கும் தீக்கடவுளின்  மகன் என்றார்கள்; காலனை ஒக்கும்
தூதன்
- (எதிர்ப்பார்க்கு) யமனைப்