பக்கம் எண் :

488யுத்த காண்டம் 

போன்ற தூதனாகிய அநுமனை; காற்றெனும் கடவுள் என்றார்-
காற்றுக்  கடவுள் ஆகிய  வாயு  தேவனே என்றார்கள்; மேலும்
ஒன்று  உரைத்தார் 
-  (அவனைக்  குறித்து)  மேலும் ஒன்று
சொன்னார்கள்;    அன்னான்   இனிமேல்  விரிஞ்சன்ஆம்
என்றார்
- அவ்வனுமன்   இனிவரும்   பிறப்பில்  பிரமதேவன்
ஆவான் என்றும் சொன்னார்கள். 
   

(76)
 

6822.

' "அப் பதம் அவனுக்கு ஈந்தான், அரக்கர் 

வேர் அறுப்பதாக

 

இப் பதி எய்தினான் அவ் இராமன்" என்று எவரும்

சொன்னார்;

 

ஒப்பினால் உரைக்கின்றாரோ? உண்மையை 

உணர்த்தினாரோ?

 

செப்பி என்? "குரங்காய் வந்தார் தனித் தனி

தேவர்" என்றார்.

  

அப்பதம் - அந்தப் பிரம  பதவியை; அவனுக்கு ஈந்தான்
அவ்   இராமன் 
-  அந்த  அநுமனுக்குத்  தந்தவன் ஆகிய
இராமபிரான்;  ரக்கர்  வேர்  அறுப்பதாக  -  அரக்கர்களை
வேரொடு  அழிப்பதற்காக;  இப்பதி   எய்தினான்  -  இந்த
இலங்கையை  (இப்போது)  அடைந்துள்ளான்;  என்று எவரும்
சொன்னார்
- என்று எல்லோரும் இயம்புகின்றனர்; ஒப்பினால்
உரைக்கின்றாரோ?
- அவ்வாறு அவர்கள், வெறும் ஒப்புக்காக
உரைக்கின்றார்களோ?   உண்மையே   உணர்த்தினாரோ? -
அன்றி, உண்மையைத் தான் உணர்த்துகின்றார்களோ? குரங்காய்
வந்தார்
- வானரங்களாக வடிவெடுத்து வந்தவர்கள்; தனித்தனி
தேவர் என்றார்
-  ஒவ்வொருவரும்  ஒவ்வொரு   தேவர்கள்
என்கின்றார்கள்;   செப்பி   என்?  -    (இவற்றையெல்லாம்)
(இப்போது) சொல்லி என்ன பயன்?
 

"விரிஞ்சனாம்   இனிமேல்"   என   மேற்பாடலில்  குறித்த
பிரமபதத்தை,   "அப்பதம்"   என்று   அநுவதித்தார்; பிரமபதம்
இராமனால் அளிக்கப்படும் என்பதனை, உத்தர  காண்ட அநுமப்
படலத்தில் பிரமனும் உரைப்பான்:
 

"வன்னிய சகாய நின்மைந்தன் வையத்தோர்க்கும்  

வானோர்க்கும்

இன்னல் செய்யும் இராவணன்தன் இலங்கை நகரை 

எரியூட்டி,

மன்னன் இராமன் மனம் உவப்ப வயவாள்அரக்கர் 

குலம் அறுத்துப்

பின்னை அவன்தன் பேர்அருளால் பிரமபதமும் 

பெறும் என்றான்"

(உத்தர. அநுமப் : 40)