அரக்கர்களை அழிப்பதற்காக, அனுமனுக்குப் பிரமபதம் கொடுத்த பரமபதநாதனே இராமனாகப் பிறந்து இலங்கை நோக்கி வந்துள்ளான் என்பதனை, உன்னையொழிய எல்லோரும் உணர்ந்துள்ளனர் என்பான், "எவரும் சொன்னார்" என்றான். |
(77) |
| |
6823. | 'ஆயது தெரிந்தோ? தங்கள் அச்சமோ? |
| அறிவோ?-யார்க்கும் |
| சேயவள்; எளியள் என்னா, சிந்தையின் இகழல் |
| அம்மா!- |
| "தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள்"என்றும், |
| "தோன்றாத் |
| தாய் அவள், உலகுக்கு எல்லாம்" என்பதும் |
| சாற்றுகின்றார். |
| |
ஆய் அது தெரிந்தோ?- (இவ்வாறு உலகோர்) ஆராய்ந்து அறிந்து கூறுகின்றார்களோ? தங்கள் அச்சமோ? - அன்றித் தங்கள் அச்சம் காரணமாகக் கூறுகின்றார்களோ?; அறிவோ? - அறிவால் அறிந்து கூறுகின்றார்களோ? (எவ்வாறாயினும்); தூயவள்- இராமனின் மனைவியாகிய அத்தூய சீதை; அமிழ்தினோடும் தோன்றினாள் என்றும்- கடல் கடைகையில் அமுதோடு தோன்றிய திருமகளாவாள்; உலகுக்கு எல்லாம்- உலகங்கள் அனைத்துக்கும்; தோன்றாத் தாய் அவள்- கண்ணுக்குத் தோன்றாத அன்னை ஆவாள் அவளே; யார்க்கும் சேயவள்- உலகோர் யாவருக்கும் எட்டாப் பரமபதத்தில் வாழும் பெரிய பிராட்டி அவள் ஆவாள்; எளியள் என்னா - (நம் கண்ணுக்குப் புலப்பவதால்) எளியவள் என்று; சிந்தையின் இகழல் - மனத்தால் இகழற்க; என்பதும் சாற்றுகின்றார் - என்றும் உரைக்கின்றார்கள். |
பிறக்கும் போதே மணத்தோடு தோன்றும் துழாய் என்பது போல, தோன்றும் போதே பிராட்டி அமிழ்தோடு தோன்றினாள் என்பார், "தூயவள் அமிழ்தினோடுந் தோன்றினாள்" என்றார். இப்பாடல், பூட்டுவிற் பொருள் கோளாம். "ஆயது தெரிந்தோ?" என்பதற்கு, முற்பாடலில் குறிப்பிட்டுள்ளபடி, தேவர்கள் யாவரும் வானரர் "ஆயது தெரிந்தோ?" எனவும் உரைக்கலாம். |
(78) |
6824. | ' "கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம்; |
| மீனுடை அகழி வேலை விலங்கல்மேல் இலங்கை |
| வேந்தன் |