தூண்கள் உலையில் எழுந்த அனற்கொழுந்துகளாகவும் சிவந்த வான் மேகங்கள் அனல்கொழுந்துகளால் உலையிற் காய்ச்சப் பெற்ற இரும்புப் பாளங்களாகவும் கொள்க. |
(11) |
6847. | 'வில் படி திரள் தோள் வீர! நோக்குதி--வெங் கண் |
| யானை |
| அல் படி நிறத்தவேனும், ஆடகத் தலத்தை, ஆழ, |
| கல் படி வயிரத் திண் கால் நகங்களின் கல்லி, |
| கையால் |
| பொற் பொடி என்ன வீசி, பொன்மலை என்னப் |
| போவ! |
| |
வில்படி திரள் தோள்வீர- வில்லின் தழும்புகள் எப்போதும் பதிந்துள்ள அகன்ற தோள்களுக்குரியவனே! வெங்கண் யானை- கடுஞ்சினம் கொண்ட கண்களையுடைய யானைகள்; அல்படி நிறத்தவேனும் - இருள் படிந்தாற் போன்ற கருமை நிறம் உடையவாயினும்; ஆடகத் தலத்தை ஆழ - (இலங்கையின்) பொன்னாலான தரையினை ஆழமாக; கல்படி வயிரத்திண் கால்- கல்லைப் போன்ற வன்மை வாய்ந்த திண்ணிய கால்களின்; நகங்களின் கல்லி - நகங்களால் அகழ்ந்தெடுத்து; கையால் பொற்பொடி என்ன வீசி - (தம்) துதிக்கைகளால் பொன்பொடி போல் (மேலே) வீசி; பொன்மலை என்னப் போவ- பொன்மலைகள் நகர்ந்தால் போல் போவதை; நோக்குதி- பார்ப்பாயாக. |
வில்-வில் தழும்பினைக் குறித்து நின்றது. இதுமுதல் இனிவரும் பத்துப் பாடல்களிலும் இலக்குவனின் வீரம் செழுமிய உறுப்புகளையும் பண்பினையும் தொடர்ந்து பெருமான் போற்றிக் கூறி, அவனுக்கு விழிகளாலேயே ஒரு புகழ் மாலை தொடுத்துச் சூட்டுவதனை நோக்குக. உலகத்து யானைகள் தலையில் மண்ணைவாரிப் போட்டுக் கொள்வது இயல்பாக இருக்க இலங்கை மாநகரத்து யானைகள் பொன்னை வாரிப் போட்டுக் கொள்ளும் எனும் சமற்காரம் உணர்க. |
(12) |
6848. | 'பூசல் விற் குமர ! நோக்காய்--புகர் அற விளங்கும் |
| பொற்பின் |
| காசுடைக் கதிரின் கற்றைக் கால்களால் கதுவுகின்ற |