| அக் காலம் உள்ளான், கரடிக்கு அரசு ஆகி |
| நின்றான், |
| இக் காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான். |
| |
கரடிக்கு அரசு ஆகிநின்றான் - (அதோ) கரடிகளுக்கு எல்லாம் தலைவன் ஆகி நிற்கின்ற அவன் சாம்பன். முக்காலமும் மொய்ம்மதியால் முறையின் உணர்வான்- (அவன்) (இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும்) முன்று காலங்களையும் நிறைந்த அறிவால் முறையே உணர்ந்து சொல்லவல்லவன்; புக்கு ஆலம் எழ - உட்புகுந்து நஞ்சு எழுமாறு; புணரி புலவோர் கலக்கும்- கடலைத் தேவர்கள் கலக்கிய; அக்காலம் உள்ளான்- அந்தக் காலத்திலேயே (அவன்) இருந்தவன்; இக்காலம் நின்றும் - இவ்வளவு காலம் வாழ்ந்திருந்தும் (இப்போதும்); உலகு ஏழும் எடுக்க வல்லான் - ஏழு உலகங்களையும் பெயர்த்தெடுக்கும் வல்லமை வாய்ந்தவன். |
சிலர்க்கு இறந்தகாலம் மறந்து போய் நிகழ்காலமே நினைவில் நிற்கும். பலருக்கும் எதிர்காலம் இப்படி இருக்கும் என முற்றிலும் தெரியாது. சாம்பனுக்கோ முக்காலமும் உணரும் நிறைமதியுண்டு. என அவன் அறிவுத் திறம் உரைத்தது. கடல் கடைந்த அன்றே இருந்தவன். அவனுக்கு யுகம் கடந்தும் பலம் கடவாத உடல் திறமும் உண்டு என சாம்பனின் அறிவு உடல் என இருதிறமும் உரைத்தவாறு. முக்காலம் உணர்தலை அறிவன் வாகை என்பர். மொய்ம்மதி-நிறையறிவு. |
(28) |
6888. | 'சேனாபதிதன் அயலே, இருள் செய்த குன்றின் |
| ஆனா மருங்கே, இரண்டு ஆடகக் குன்றின் |
| நின்றார், |
| ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார்; |
| வானோர்தம் மருத்துவர் மைந்தர்; வலிக்கண் |
| மிக்கார். |
| |
சேனாபதி தன் அயலே - சேனாதிபதியாகிய நீலன் அருகிலே; இருள் செய்த குன்றின் மருங்கே ஆனா- இருண்ட நிறமுடைய குன்றின் பக்கத்தே நீங்காமல் (நிற்கும்); இரண்டு ஆடகக் குன்றின் நின்றார் - இரண்டு பொற்குன்றுகள் போல நிற்கின்ற அவ்விருவரும்; ஏனோரில் - சேனையிலிருக்கும் பிறருக்குள்ளே; ராமன் இலக்குவன் என்னும் ஈட்டார் - இராமலக்குவர் போன்ற வலிமையுடையவர்கள்; வானோர் தம் மருத்துவர் மைந்தர் - |