பக்கம் எண் :

534யுத்த காண்டம் 

சிவபிரான் போல் நிற்பவன்; பனசன்- பனசன் எனப்படுவான்;
இப்போர்க்கு எலாம் தானே ஏன்று நின்றவன் இடபன்
-
இந்தப்   போர்   அனைத்திற்கும் தானே (முதல் வரிசையில்)
ஏற்று   நிற்பவன் ஆகிய   (இவன்) இடபன் ஆவான்; மற்று
இவன்   தனக்கு
   -    வேறு     இவனுக்கு;    எதிரே
தோன்றுகின்றவன்
-  எதிர்திசையில்  தோன்றுகின்ற அவன்;
சுடேணன்
- சுடேணன்  எனும்    பெயரினன்; மூதறிவொடு
தொடர்ந்தான்
- முற்றிய அறிவோடு கூடியவன்.
 

மூன்று கண்ணில்லாமலும்  முப்புரம் எரிக்கவல்ல ஆற்றல்
உடையவன் பனசன் என்றவாறு. போர் நடக்கும் போதெல்லாம்
இரண்டாம்   வரிசையை   விரும்பாது    முதல்  வரிசையைத்
தானாகவே விரும்பி வந்து நிற்பவன் இடபன் ஆதலின், "தானே
ஏன்று  நின்றவன்"  என்றார். உடல் வலிவோடு அறிவு வலியும்
தொடர்வது    வீரர்க்குப்     பெருஞ்  சிறப்பு நல்குமாதலின்,
மூதறிவொடு தொடர்ந்தான் சுடேணன் என்றார்.
 

(32)
 

6892.

'வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி,

மேதினியை

முதுகு நொய்து எனச் செய்தவன், கனலையும்  

முனிவோன்,

கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை, 

ததிமுகன்; அவன், சங்கன் என்று உரைக்கின்ற  

சிங்கம்.

 

கதிரவன்  மகற்கு - சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கு;
இடமருங்கே நின்ற காளை
- இடப்பக்கமாய் நிற்கின்ற காளை
போன்ற வீரன்;   வெதிர்கொள் குன்று எலாம் வேரொடும்
வாங்கி
-  மூங்கில்களைத்   தன்னிடம்  கொண்ட மலைகளை
யெல்லாம் அடியோடே பெயர்த்து;   மேதினியை   முதுகு -
பூமியின்   முதுகினை;     நொய்தெனச்     செய்தவன் -
கனஞ்சுமக்காதிருக்கச் செய்தவனும்; கனலையும் முனிவோன்-
 தீயையும் சீறுகின்ற   சினமுடையோனும் ஆகிய; ததிமுகன் -
ததிமுகன் எனும் பெயர்   உடையோன்;    அவன்- அதோ
அங்கிருப்பவன்; சங்கன் என்று  உரைக்கின்ற  சிங்கம் -
சங்கன் என்று உரைக்கப்படுகின்ற சிங்கம் போன்றவன்.
 

வெதிர்-மூங்கில்.   அது   குறிஞ்சிக் கருப் பொருள்களுள்
ஒன்று ஆதலால் "வெதிர் கொள் குன்று" என்றார். மலைகளைப்
பிடுங்கி,   பூமியின்  முதுகு சுமக்கும் பாரத்தைக் குறைத்தவன்
ஆதலின்,