பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 547

கடல் கடைந்த வாலியாகவும் கொள்க. இப்பாடலில் இராவணன்
சுக்கிரீவனைக்          கடைவதாகக்      கொள்ளலாமாறும்
சொல்லமைப்புள்ளதைக் கண்ட பழைய உரையாளர்.    "இந்தக்
கவிக்குச் சுக்கிரீவன் கர்த்தாவாக அறிக" எனக் குறித்துள்ளமை
குறிக்கத்தக்கது. 
 

(17)
 

6912.

ஊறு படு செம்புனல், உடைத்த கரை உற்ற 

ஆறு படர்கின்றன எனப் படர, அன்னார், 

பாறு, பொருகின்றன பருந்து, இவை எனப் போய், 

ஏறினர் விசும்பிடை; இரிந்த, உலகு எல்லாம். 

 

ஊறு  படு  -  புண்பட்ட  உடலிலிருந்து; செம்புனல் -
கொட்டுகின்ற இரத்தம்; உடைத்த கரை உற்ற -  உடைபட்ட
கரையாகக் கூடிய; ஆறு படர்கின்றன என -நதிகள் இரண்டு
பெருக்கெடுக்கின்றன என்னுமாறு; படர்- அகழியில் சங்கமிக்க;
அன்னார்
- சுக்கிரீவன், இராவணன் எனும்  இருவரும்; பாறு
பருந்து    இவை பொருகின்றன
  - கழுகும் கருடனுமாகிய
இரண்டும் போரிடுகின்றன; எனப் போய் - எனுமாறு எழுந்து;
விசும்பிடை    ஏறினர்
    -  ஆகாய வீதியில் உயர்ந்தனர்;
உலகெல்லாம்
- இந்தக் காட்சியைக் கண்ட உலகினர்; இரிந்த-
அஞ்சி ஓடினர்.
  

(18)
 

6913.

தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய், 

காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன் 

தாருடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான், 

ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான். 

 

தூர     நெடுவானின்    மலையும் சுடரவன் சேய் -
தொலைவிலே நீண்ட  ஆகாயத்தே   போர்  புரியும் சூரியனின்
புதல்வனான  சுக்கிரீவன்;  காரினொடு மேரு நிகர்- நிறத்தால்
மேகத்தையும்   பலத்தால்    மேருவையும்  போன்ற; காய்சின
அரக்கன்
-   கொடுங்கோபங்கொள்ளும்    இராவணனுடைய;
தாருடைய   தோள்கள்   பலவும்
    -   மாலை    சூடிய
பலதோள்களாலும்;    தழுவ  நின்றான் - தழுவப்பட்டவனாய்
நின்றான்;   ஊரினொடு   கோள்கதுவும்  -   ஊர்கோளால்
சுற்றப்பட்ட; தாதையையும்  ஒத்தான்  -   தன்  தந்தையாகிய
சூரியனைப் போல (அப்போது) தோற்றமளித்தான். 
 

(19)