பக்கம் எண் :

548யுத்த காண்டம் 

6914.

பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில் 

செங் கதிரவன் சிறுவனை, திரள் புயத்தால், 

மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன், 

வெங் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான். 

 

விசும்பிடை- ஆகாயத்தில்; பொங்கு   அமர்  உடன்று
பொருபோழ்தில்
-  சினம் பொங்கிக்   கொதித்து (இருவரும்)
போரிடுங்காலத்தில்;   செங்கதிரவன்  சிறுவனை  -  சிவந்த
கிரணங்களையுடைய சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவனை; திரள்
புயத்தால்
   -   தன்  திரண்ட இருபது தோள்களால்; மங்கல
வயங்குஒளி
- அச்சுக்கிரீவனுடைய   தூயமேனியில் விளங்கும்
ஒளியை;   மறைத்தவல்   அரக்கன் - மறைத்து நின்ற வலிய
இராவணன்;    வெங்கதிர்    கரந்தது-  வெப்பம் நிறைந்த
கதிர்களையுடைய   சூரியனை   மறைத்து  நின்ற; ஒரு மேகம்
எனல் ஆனான்
- ஒரு மேகம் போல் தோன்றினான். 
 

(20)
 

6915.

நூபுர மடந்தையர் கிடந்து அலற, நோனார் 

மா புரம் அடங்கலும் இரிந்து அயர, வன் தாள் 

மீ புர மடங்கல் என, வெங் கதிரவன் சேய், 

கோபுரம் அடங்க இடிய, தனி குதித்தான். 

 

நூபுர மடந்தையர்- சிலம்புகளை யணிந்த மகளிர்; கிடந்து
அலற
- வீழ்ந்து புலம்பவும்; நோனார் மாபுரம் அடங்கலும்-
பகைவருடைய பெருநகரம் முழுவதும்; இரிந்து அயர- அஞ்சி
ஓடித்  தளரவும்;  வன்தாள் மீபுர  மடங்கல் என   - வலிய
கால்களின்  மேற்பகுதி   சிங்கமாகத்  தோன்றிய திருமால்போல;
வெங்கதிரவன் சேய்
- வெம்மை கொண்ட சூரியன் புதல்வனான
சுக்கிரீவன்;   கோபுரம்   அடங்க இடிய- கோபுரம் முழுவதும்
இடியுமாறு; தனி குதித்தான்- தனியே குதித்தான்.
  

(21)
 

6916.

ஒன்றுற விழுந்த உருமைத் தொடர ஓடா, 

மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன, 

'தின்றிடுவென்' என்று எழு சினத் திறல் அரக்கன் 

பின் தொடர வந்து, இரு கரத் துணை பிடித்தான். 

  

ஒன்றுற விழுந்த- சிதறாது வீழ்ந்த; உருமைத் தொடர ஓடா-
இடியைப் பின் தொடர்ந்து ஓடி; மின் தெரி எயிற்றின் - மின்னல்