மின்னுவது போன்று தெரிகின்ற பற்களையுடைய; ஒரு மேகம் விழும் என்ன - ஒரு மேகம் விழுகின்றது என்னுமாறு; 'தின்றிடுவென்' என்று- இவனைத் தின்றிடுவேன் என்று கூறி; எழுசினத்திறல் அரக்கன்- ஓங்குகின்ற வெகுளியையுடைய வல்லரக்கன் ஆகிய இராவணன்; பின் தொடரவந்து- சுக்கிரீவனைப் பின்பற்றி வந்து; இருகரம் துணை பிடித்தான் - அவன் இருகரங்களையும் தன் இருகரங்களாலும் பற்றினான். |
மின்னலைத் தொடர்ந்து இடி விழும்; இங்கு மாறி வருதலின் இல்பொருள் உவமை. |
(22) |
| 6917. | வந்தவனை நின்றவன் வலிந்து, எதிர் மலைத்தான், |
| அந்தகனும் அஞ்சிட, நிலத்திடை அரைத்தான்; |
| எந்திரம் எனக் கடிது எடுத்து, அவன் எறிந்தான்; |
| கந்துகம் எனக் கடிது எழுந்து, எதிர் கலந்தான். |
| |
நின்றவன்- நின்றவனான சுக்கிரீவன்; வந்தவனை- வந்தவனான இராவணனை; வலிந்து எதிர் மலைந்தான் - வலிமையுடனே எதிர்த்துப் போரிட்டான்; அந்தகனும் அஞ்சிட - யமனும் அஞ்சுமாறு; நிலத்திடை அரைத்தான் - பூமியில் இட்டுத் தேய்த்தான்; அவன் எந்திரம் என- அப்போது, இராவணன் இயந்திரம் எனுமாறு; கடிது எடுத்து எறிந்தான்- சுக்கிரீவனை விரைந்து எடுத்து வீசி எறிந்தான்; கந்துகம் எனக் கடிது எழுந்து - (வீசியெறியப்பட்ட) பந்து விரைவில் திரும்புவது போல விரைவில் எழுந்து வந்து; எதிர் கலந்தான் - மீண்டும் சுக்கிரீவன் (அரக்கனோடு) கை கலந்தான்; |
(23) |
| 6918. | படிந்தனர், பரந்தனர், பரந்தது ஓர் நெருப்பின் |
| கொடுஞ் சினம் முதிர்ந்தனர், உரத்தின்மிசை குத்த, |
| நெடுஞ் சுவர் பிளந்தன; நெரிந்த நிமிர் குன்றம்; |
| இடிந்தன, தகர்ந்தன, இலங்கை மதில் எங்கும். |
| |
படிந்தனர்; பரந்தனர்- (இருவரும்) நிலத்தில் படிந்து வீழ்ந்து, பல திசைகளிலும் பரவிச் சென்று போரிட்டனர்; பரந்தது ஓர் நெருப்பின் - எவ்விடத்தும் பரவி எரியும் நெருப்பினைப் போல; கொடுஞ்சினம் முதிர்ந்தனர்- கொடுங் கோபம் முற்றினார்கள்; உரத்தின் மிசை குத்த - (ஒருவர்) மார்பின் மேல் (ஒருவர்) குத்த; நெடுஞ்சுவர் பிளந்தன- அருகிலிருந்த சுவர்கள் (அதிர்ச்சியில்) |