பக்கம் எண் :

550யுத்த காண்டம் 

பிளந்தன;   நிமிர் குன்றம்  நெரிந்த - ஓங்கி  உயர்ந்திருந்த
மலைகள் பொடிந்து   சரிந்தன;     இலங்கைமதில்  எங்கும்
இடிந்தன;   தகர்ந்தன
  -  இலங்கையில்  மதில்கள்  என்று
இருப்பவையெல்லாம் இடிந்து தகர்ந்தன.
 

அதிர்ச்சியால்   கட்டிடங்கள் சிதையும் என்பதை அன்றே
அறிந்து உணர்த்தும் நுட்பத்தை இக்கவிதை காட்டுகிறது.
 

(24)
 

6919.

செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை

தேரார்,

பிறிந்தனர் பொருந்தினர் எனத் தெரிதல் பேணார்,

எறிந்தனர்கள், எய்தினர்கள், இன்னர் என, முன்

நின்று

அறிந்திலர், அரக்கரும்; அமர்த் தொழில் அயர்ந்தார்.

 

செறிந்து   உழல் கறங்கு அனையர்- நெருங்கிச் சுழலும்
காற்றாடி போன்றவராய் உள்ள அவ்விருவருடைய; மேனி நிலை
தேரார்
  -   உடல்கள்   எவ்விடத்துள்ளன   எனத்   தெளிய
முடியாதவராயும்;  பிறிந்தனர்  பொருந்தினர் எனத் தெரிதல்
போனார்
- (அவர்கள் இப்போது) பிரிந்துள்ளனர் சேர்ந்துள்ளனர்
என்பதனையும் அறிய முடியாதவராயும்; இன்னார்எறிந்தனர்கள்
- இன்னார்    இன்னாரை   வீசினார்; இன்னார்எய்தினர்கள்-
இன்னார் இன்னாரைக் கிட்டினார்; என முன்நின்று அரக்கரும்
அறிந்திலர்
- என்பதனையும் முன்னே நின்றும் அரக்கரும் அறிய
இயலாதவராயும்; அமர்த்தொழில்  அயர்ந்தார்  - அரக்கர்கள்
அப்போர்த்தொழிலைக் கண்டு மனம் தளர்ந்தார்கள்.
 

மற்போரில்    விரைவே  மிக  முக்கியம் எனக் கருதப்படும்
மற்போர்  வல்ல  அரக்கர்களாலும்  இவர்களின் துரித கதியைக்
கண்டு உணர முடியவில்லை; ஆதலால் அரக்கரும் மனந்தளர்ந்து
போனார்கள் என்றார்.
 

(25)
 

சுக்கிரீவன் வாராமை கண்டு இராமன் கலக்கம்
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

6920.

இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின், எழிலி

வண்ணன்,

மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு

காணான்,