| 'உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த' |
| என்னா, |
| தன் உணர்வு அழிந்து, சிந்தை அலமந்து, தளர்ந்து, |
| சாய்ந்தான். |
| |
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் - இத்தகையதோர் ஒப்பற்ற நிகழ்ச்சி, (இப்படி) நடந்து கொண்டிருக்கையில்; எழிலிவண்ணன்- முகில் வண்ணனாகிய இராமபிரான்;மன் உயிர் அனைய காதல் துணைவனை- (தன்) அழியா உயிர் அனைய அன்புத் துணைவனான சுக்கிரீவனுடைய; வரவு காணான்- வருகையைக் காணாதவனாய்;உன்னிய கருமம் எல்லாம் உன்னொடும் முடிந்தது என்னா - 'நான் புரியக் கருதியிருந்த செயல்கள் யாவும் உன்னோடும் அழிந்தொழிந்தன' என்று கூறி; தன் சிந்தை அலமந்து - தன் உள்ளம் சுழன்று; உணர்வு அழிந்து - அறிவு ஒடுங்கி; தளர்ந்து சாய்ந்தான் - தளர்ச்சியுற்று வீழ்ந்தான். |
உன்னிய கருமங்கள்: அறந்தலை நிறுத்துதல்; வேத நெறி நிறுத்துதல்; உலகோர் பூணச் செந்நெறி செலுத்துதல்; தீயோராம் அரக்கர் குழுவை அழித்தல்; தக்கோரின் இடர் துடைத்தல் (கம்ப. 5885). |
(26) |
| 6921. | 'ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர்த் துணைவ! |
| உன்னை |
| இன்றியான் உளனாய் நின்று, ஒன்று இயற்றுவது |
| இயைவது அன்றால்; |
| அன்றியும், துயரத்து இட்டாய், அமரரை; அரக்கர்க்கு |
| எல்லாம் |
| வென்றியும் கொடுத்தாய்; என்னைக் கெடுத்தது உன் |
| வெகுளி'என்றான். |
| |
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர்த் துணைவ- என் உணர்வும் உன் உணர்வும் ஒன்றே என்னுமாறு என் உயிரோடு ஒன்றிவிட்ட என் துணைவனே! உன்னை இன்றி- நீயில்லாமல்; யான் உளனாய் நின்று-நான் மட்டும் தனித்து உயிருடன் இருந்து; ஒன்று இயற்றுவது இயைவது அன்று-ஒரு செயல் புரிவதென்பது நடைபெறுவது ஒன்று அன்று; அன்றியும்- அல்லாமலும், (உன் செயலால்); அமரரைத் துயரத்து இட்டாய் - தேவர்களைத் துயரத்தில் நீ தள்ளி விட்டாய்; அரக்கர்க்கு எல்லாம் வென்றியும் கொடுத்தாய் - இராட்சதர்களுக்கெல்லாம் வெற்றிக் (களிப்பை) |