பக்கம் எண் :

552யுத்த காண்டம் 

அள்ளி    வழங்கிவிட்டாய்;   உன்  வெகுளி  -  (இவ்வாறு)
உன்னுடைய சினமானது;  என்னைக்  கெடுத்தது என்றான்-
(உன்பால் உயிரை வைத்திருந்த) என்னை முடித்து விட்டது;
 

"புணர்ச்சி     பழகுதல்      வேண்டா    உணர்ச்சிதான்
நட்பாங்கிழமை  தரும்" (திருக்கு: 7850 என்ற கருத்தினை ஒட்டி,
"ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர்த்துணைவ!" என்றார்.
 

(27)
 

6922.

'தெய்வ வெம் படையும், தீரா மாயமும், வல்ல 

தீயோன்

கையிடைப் புக்காய்; நீ வேறு எவ்வணம் கடத்தி,  

காவல்?

வையம் ஓர் ஏழும் பெற்றால், வாழ்வெனே?  

வாராய்ஆகில்,

உய்வெனே?--தமியனேனுக்கு உயிர் தந்த  

உதவியோனே!

 

தமியனேனுக்கு - (தேவியைப் பிரிந்து சிந்தை திகைத்துத்
தனியனாய்த்     தவித்துக்  கிடந்த)    எனக்கு; உயிர் தந்த
உதவியோனே
-(தேவி கிட்டுவாள் எனும் நம்பிக்கை தந்து) என்
உயிரைத்    தந்த    உதவியாளனே! தெய்வ வெம்படையும்-
தெய்வங்கள்   தந்த   கொடிய    படைக்கருவிகளையும்; தீரா
மாயமும்
- நீங்காத மாயங்களையும் உடைய; வல்ல தீயோன்-
வலியவனான   தீயவன்  (இராவணன்); கையிடைப் புக்காய் -
கரங்களிலே சிக்கினாய்; நீ வேறு எவ்வணம் காவல் கடத்தி?
- நீ  (இனி)  வேறு எந்த வகையில் அவன் காவலிலிருந்து தப்ப
உள்ளாய்? வாராய் ஆகில் - (நீ அவனிடமிருந்து) தப்பி வாராய்
ஆனால்; வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே?-  ஓர்
ஏழு உலகங்களையும்  தந்தாலும் நான் உயிர் வாழ  இயலுமோ?;
உய்வெனோ?
- (நீ வாராயாகில்)    நான் உயிர் வாழ்வேனோ?
வாழேன்!
 

(28)
 

6923.

'ஒன்றாக நினைய, ஒன்றாய் விளைந்தது, என் 

கருமம்;அந்தோ! 

என்றானும், யானோ வாழேன்; "நீ இலை" எனவும் 

கேளேன்;