பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 553

இன்று ஆய பழியும் நிற்க, நெடுஞ் செருக் களத்தின் 

என்னைக்

கொன்றாய் நீ அன்றோ? நின்னைக் கொல்லுமேல்,

குணங்கள் தீயோன்.

 

குணங்கள்   தீயோன்  -  தீய  குணங்களைக்  கொண்ட
இராவணன்;  உன்னைக்   கொல்லுமேல்  -  சுக்கிரீவனாகிய
உன்னைக் கொன்று  விட்டானேயானால்; என் கருமம்  - நான்
மேற்கொண்ட  செயல்;    ஒன்றாக   நினைக்க    ஒன்றாய்
விளைந்தது
-நான் ஒருவகையாக நினைக்க அது வேறு வகையாக
முடிந்தது ஆகிவிடும்; அந்தோ!  -  ஐயோ! யானோ என்றானும்
வாழேன் - நானோ, (இனி) எந்த வகையிலும் வாழ மாட்டேன்; நீ
இலை    எனவும்  கேளேன்
- நீ  இல்லை (மறைந்தாய்) என்ற
சொற்களைக்   கேட்கவும்   என்னால்  இயலாது;  இன்று ஆய
பழியும் நிற்க
- இன்று; உன்னைப் பகைவனிடத்திலிருந்து மீட்க
இயலாத  பழியும் எனக்கே  சேர;  நெடுஞ் செருக்களத்தின் -
பெரிய போர்க்களத்தில்;  என்னைக் கொன்றாயும் - என்னைக்
கொன்றவனும்; நீயே - நீயேயாவாய்!
 

பிராட்டியைப்   பெறுவதற்காக  எண்ணித்  துணிந்த கருமம்,
நண்பனையிழப்பதில்  முடிந்ததே  என  ஏங்குகின்றான் ஆதலின்,
"என் கருமம் ஒன்றாக நினைக்க ஒன்றாய் விளைந்தது"  என்றான்.
"ஒன்றை    நினைக்கின்   அது  ஒழிந்திட்டு ஒன்றாகும்" என்பது
மூதுரை.
  

(29)
 

6924.

'இறந்தனை என்ற போதும் இருந்து, யான்

அரக்கர்என்பார் 

திறம்தனை உலகின் நீக்கி, பின் உயிர் தீர்வனேனும், 

"புறந்தரு பண்பின் ஆய உயிரொடும் 

பொருந்தினானை 

மறந்தனன்; வலியன்" என்பார்; ஆதலால், அதுவும்  

மாட்டேன்.

 

இறந்தனை என்ற போதும் - நீ இறந்து போனாய் என்ற
போதிலும்;    யான்    இருந்து- நான் (உடனே இறவாமல்)
உயிர்தாங்கியிருந்து    அரக்கர்   என்பார்   திறம்தனை-
அரக்கர்   எனப்படுவோரின்  இனங்களையெல்லாம்;  உலகின்
நீக்கி
- உலகத்தினின்றும் (அடியோடு) அகற்றி;  பின்  உயிர்
தீர்வென்   என்றால்
  - பிறகு  உயிர் விடுவேன் என்றாலும்;
புறந்தரு பண்பின்