பக்கம் எண் :

554யுத்த காண்டம் 

ஆய  -  (அல்லற்காலத்து)   பாதுகாத்தற்குரிய  பண்பினனாகி;
உயிரொடும் பொருந்தினானை
- உயிரோடு ஒன்றாய் இணைந்து
விட்ட நண்பனை;மறந்தனன் - மறந்தவனாய்ப் போர்த்தொழிலில்
இவனால் ஈடுபடமுடிந்ததே! வலியன் -  எத்தகைய வலிய (கல்)
மனம் கொண்டவன்   இராமன்; என்பார்  ஆதலால் - என்று
உலகோர்  கூறுவர்  ஆதலால்;  அதுவும் மாட்டேன்- (உயிர்
வாழ்ந்து அரக்கரை) அழிக்கவும் மாட்டேன்.
 

(30)
 

6925.'அழிவது செய்தாய், ஐய! அன்பினால்;

அளியத்தேனுக்கு

ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய

வாழேன்;

எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் 

எஞ்சாது ஏகி, 

செழு நகர் அடையின் அன்றோ, இத் துயர் தீர்வது 

உண்டோ?

 

ஐய!- ஐயனே! அளியத்தேனுக்கு- இரங்கத்தக்க எனக்கு;
அன்பினால் அழிவது  செய்தாய்
- (உன்) அன்பு காரணமாக
(நான்)  அழிவதற்குக்   காரணமானவற்றைச் செய்தாய்; ஒழிவு
அரும் உதவி   செய்த
- நெஞ்சில் என்றும் நீங்காத அரிய
உபகாரம் செய்த; உன்னை நான் ஒழிய வாழேன்- உன்னைப்
பிரிந்து  நான்    உயிர்  வாழ மாட்டேன்; எழுபது வெள்ளம்
தன்னின்
-  எழுபது வெள்ளம் சேனையில்; ஈண்டு ஓர் பேர்
எஞ்சாது  ஏகி
- இங்கு ஒருவரும் குறையாமல் (வெற்றியோடு
மீண்டு);   செழுநகர்   அடையின்  அன்றோ- வளமை மிகு
அயோத்தியை  நான்   அடைந்தபோதன்றி;  இத்துயர் தீர்வது
உண்டோ?
-(உன்னை இழந்த) இந்தப் பெருந்துயர் என்னைவிட்டு
நீங்கும், நீங்குமோ? (நீங்காது)
 

"அடையின்  அன்றோ"   எனும்    பாடத்திலும் "அடைந்த
போழ்தும்" என்ற பாடம் பொருட்சிறப்புடையது.
 

(31)
 

சுக்கிரீவன் இராவணன் மகுடத்துடன் வந்தடைதல்
 

6926.

என்று அவன் இரங்கும் காலத்து, இருவரும்

ஒருவர்தம்மின்

வென்றிலர் தோற்றிலாராய், வெஞ் சமம் விளைக்கும் 

வேலை,