பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 555

வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால்  

வாங்கி,

"பொன்றினென் ஆகின், நன்று" என்று அவன்  

வெள்க, இவனும் போந்தான்.

  

என்று    அவன்   இரங்கும் காலத்து - என்று அந்த
இராமபிரான் இரங்கி வருந்தும் போது; இருவரும்- இராவணன்,
சுக்கிரீவன் ஆகிய  இருவரும்; ஒருவர் தம்மின் - ஒருவருக்கு
ஒருவர்;வென்றிலர் தோற்றிலாராய்- வெற்றியோ தோல்வியோ
அடைய  இயலாதவராய்;  வெஞ்சமம் விளைக்கும் காலை -
கடும்போர்  புரியுங் காலத்தே; வன்திறல் அரக்கன் மௌலி-
வலிய   வல்லமை   வாய்ந்த இராவணனின் மகுடத்தில் உள்ள;
மணிகளை   வலிய   வாங்கி 
- மாணிக்க மணிகளைத் தன்
வலிமையினால் பிடுங்கிக் கொண்டு; அவன் - அந்த இராவணன்;
'பொன்றினென் ஆயின் நன்று
- 'நான் இனி இறந்து போதலே
நல்லது"; என்று   வெள்க -  என்று நாணமுறுமாறு; இவனும்
போந்தான்
- சுக்கிரீவனும் இராமனை வந்து அடைந்தான்.
 

மணி  மகுடத்திலிருந்து, மணிகளை இழத்தல்   மானக்கேடு.
ஆதலின், 'இறந்து போதலே இனிச் சிறந்தது' என்று இராவணன்
வெட்கமுற்றான்.   "மானம்   இழந்தபின் வாழாமை முன் இனிது"
(இனி.40) உயிர் நீப்பர் மானம் வரின்" (திருக்கு: 968); "இளிவரின்
வாழாத மானம் உடையார்" (குறள். 970) என வருவன   காண்க.
"பொறிப்புண்டரீகம் போலும் ஒருவனால் புனைந்த  மோலி பறிப்
புண்டும்" (கம்ப:7008)    என்றும் "மணிபறித்தெழுந்த  வெந்தை"
(கம்ப: 6891) என்றும்,  "இக்கிரி    பத்தின்    மௌலி இனமணி
இமைப்பில் கொண்ட" (கம்ப. 6960) என்றும் சுக்கிரீவனின் இந்தச்
செயற்கருஞ்செயல்   மேலும்   பல இடங்களில் நினைக்கப்படும்.
இருவரும்    சம    பலம்     உள்ளவராதலின்    "வென்றிலர்
தோற்றிலாராய்ப்" போர்   நீளுவதறிந்த சுக்கிரீவன், தான்  போர்
புரிந்ததற்கு   அடையாளமாக    மணிகளைப்   பறித்து   வந்து
பெருமானிடம் வைத்தான் என்க.
 

(32)
 

6927.

கொழு மணி முடிகள்தோறும் கொண்ட நல்

மணியின் கூட்டம்

அழுது அயர்வுறுகின்றான்தன் அடித்தலம் அதனில்  

சூட்டி,