பக்கம் எண் :

556யுத்த காண்டம் 

தொழுது, அயல் நாணி நின்றான்; தூயவர்  

இருவரோடும்

எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று  

அன்றே.

 

கொழு மணி முடிகள் தோறும்- உயர்வான நவமணிகள்
பதிக்கப்பெற்ற மகுடங்களிலிருந்து; கொண்ட நல்  மணியின்
கூட்டம்
  -   பறித்துக்    கொண்டு   வரப்பட்ட    நல்ல
மாணிக்கங்களின் கூட்டத்தை; அழுது அயர்வு உறுகின்றான்
தன்
  -   தன்னைக்    காணாது     அழுது     தளர்கின்ற
இராமபிரானுடைய;   அடித்தலம்    அதனில்     சூட்டி-
திருவடிகளில் (அணியாகச்)   சூட்டி; தொழுது அயல் நாணி
நின்றான்  
-    வணங்கி, வெட்கமுற்று  அயலே  நின்றான்
(சுக்கிரீவன்); தூயவர் இருவரோடும்- (அப்போது)  தூய்மை
மிகுகுணத்தவராகிய   இராம  இலக்குவரோடு கூடிய; எழுபது
வெள்ளம் யாக்கைக்கு
- எழுபது வெள்ளம் தொகை கொண்ட
வானர சேனை என்னும்   உடலுக்கு; ஓர் உயிர் எய்திற்று -
ஒப்பற்றதோர் உயிர் வந்தடைந்தது. (எனலாம்).
 

இராவணனைக் கொன்று திரும்ப இயலாமையால் நாணினன்
என்பதாம்.  "கருமத்தால்   நாணுதல்   நாணு"  (திருக்கு. 1011)
பையல்  தலையை  இடப்பெறாத நாம், என் சொல்லி முன்னே
நிற்பது என்று   பெருமான்   அருகே வந்து  நின்றார்.  என்ற
பெரியவாச்சான் பிள்ளையின் கூற்று. "அயல்  நாணி  நின்றான்"
எனும்   கவிஞர்   பிரானின்  தொடர்க்கு  அரிய விளக்கமாய்
அமைவது கருதத் தக்கது.
 

(33)
 

இராமன் சுக்கிரீவனைத் தழுவி தன் அன்பை வெளியிடுதல்
 

6928.

என்பு உறக் கிழிந்த புண்ணின் இழி பெருங் 

குருதியோடும்

புன் புலத்து அரக்கன்தன்னைத் தீண்டிய தீமை  

போக;

அன்பனை அமரப் புல்லி, மஞ்சனம் ஆட்டி விட்டான், 

தன் பெரு நயனம் என்னும் தாமரை சொரியும் நீரால். 

 

அன்பனை   அமரப்   புல்லி  -  (தன்) அன்பனாகிய
சுக்கிரீவனை  நன்கு தழுவிக் கொண்டு; என்பு உறக் கிழிந்த
புண்ணின்
- எலும்பு   வரையில்  கிழிபட்ட  புண்களிலிருந்து;
இழிதரும்   குருதியோடும்
-  கொட்டுகின்ற  இரத்தத்துடன்
புன்புலத்து  அரக்கன்  தன்னை- இழிந்த அறிவினன் ஆகிய
இராவணனை; தீண்டிய புன்மை போக