- மற்போரில் தொட்ட இழிவெல்லாம் தீருமாறு; தன் பெரும் நயனம் என்னும் - தன்னுடைய பெரிய விழிகள் என்கின்ற; தாமரைத் தடத்து நீரால்- தாமரைத் தடாகத்தின் நீரினால்; மஞ்சனம் ஆட்டிவிட்டான்- நீராட்டினான் (இராமபிரான்). |
(34) |
| 6929. | 'ஈர்கின்றது அன்றே, என்றன் உள்ளத்தை; இங்கும் |
| அங்கும் |
| பேர்கின்றது ஆவி; யாக்கை பெயர்கின்றது இல்லை; |
| பின்னை, |
| தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை?' என்று, |
| தெண் நீர் |
| சோர்கின்ற அருவிக் கண்ணான் துணைவனை |
| நோக்கிச் சொல்லும்: |
| |
தெண் நீர் அருவி சோர்கின்ற கண்ணான்- தெளிந்த நீரினையுடைய அருவி போலக் கண்ணீர் பொழிகின்ற கண்ணினையுடையவனான இராமபிரான்; துணைவனை நோக்கி - தன் துணையாய் அமைந்த சுக்கிரீவனைப் பார்த்து; என்றன் உள்ளத்தை ஈர்கின்றது- (நீ என்னைத் திடீரென்று பிரிந்த செயல்) என் உள்ளத்தை இரண்டாகப் பிளந்தது; ஆவி இங்கும் அங்கும் போகின்றது- என் உயிர் (உடலைவிட்டு) (உள்ளும் புறமுமாய்) ஊசலாடத் தொடங்கி அங்கும் இங்குமாக அலைந்து தவித்தது; யாக்கை பெயர்கின்றது இல்லை- என் உடலும் இயக்கத்தைத் தவிர்த்து விட்டது; பின்னை- மேலும்;தேர்கின்ற சிந்தையன்றோ திகைத்தனை?- காலமும் இடமும் தேர்ந்து செயல் புரியும் திறமுள்ளவன் மனத்தையுடையவன் அல்லவா திகைப்பூட்டும் செயல் செய்ய வைத்துவிட்டாய்? என்று சொல்லும்- என்று (மேலும்) சொல்லலானான். |
இராமனைத் தேர்வதற்குக் கூட, ஏழு மராமரங்களை எய்யச் சொல்லித் தேர்ந்த சுக்கிரீவன், இத்தகைமய செயல் செய்தது எவ்வாறு என வியந்த பெருமான் தேர்கின்ற சிந்தையன்றோ திகைத்தது என்றான். |
(35) |
| 6930. | 'கல்லினும் வலிய தோளாய்! நின்னை அக் கருணை |
| இல்லோன் |
| கொல்லுதல் செய்தான் ஆகின், கொடுமையால் |
| கொற்றம் பேணி, |