பக்கம் எண் :

558யுத்த காண்டம் 

பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி, 

வெல்லினும், தோற்றேன் யானே அல்லெனோ, 

விளிந்திலாதேன்?

  

கல்லினும் வலிய தோளாய்- மலையினையும் விட வலிமை
வாய்ந்த   தோள்களையுடைய  சுக்கிரீவனே!   நின்னை - (என்
உயிர்த்துணைவனாகிய)   உன்னை; அக்கருணை  இல்லோன்-
அந்தக்  கருணையற்றோன்  ஆகிய   இராவணன்; கொல்லுதல்
செய்வான் ஆகின்
-கொன்றிருப்பானேயானால்; விளிந்திலாதேன்
- உயிர்துறவாத  யான்;   கொற்றம்   கொடுமையால் பேணி-
வெற்றியைக்   கொடும் போர்  செய்து பெற எண்ணி; பல்பெரும்
பகழி  மாரி
- பற்பல  பெரிய அம்பு  மழையினால்; வேரொடும்
பறிய நூறி
-  இராவணனை  சுற்றத்தோடும்   பறித்து  அழித்து;
வெல்லினும்
-  வென்றேன்  ஆயினும்;  தோற்றேன்  யானே
அல்லனோ?
-  (அப்போதும்)  தோற்றவன்  நானே  ஆவேன்
அன்றோ?
 

இராவணனை வேரொடு அழித்தாலும் அச்செயல் சுக்கிரீவன்
இழப்பினை   ஈடு   செய்யாது   என்று   சுக்கிரீவன்  பெருமை
உணர்த்தப்பட்டது.
 

(36)
 

6931.

'பெருமையும் வண்மைதானும், பேர் எழில் 

ஆண்மைதானும்,

ஒருமையின் உணர நோக்கின், பொறையினது  

ஊற்றம் அன்றே!

அருமையும், அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய்

போல

இருமையும் கெடுக்கலுற்றாய்; என் நினைந்து, என்  

செய்தாய் நீ!

 

ஒருமையின் உணர நோக்கின் -  மனத்தை ஒருமுகமாக்கி
உணர்ந்து   பார்த்தால்;  பெருமையும்   வண்மை   தானும் -
பெருமைப் பண்பும் வண்மைக் குணமும்; பேர் எழில் ஆண்மை
தானும்
-  பேரழகுடைய  வீரப் பண்பும்; பொறையினது ஊற்றம்
அன்றே
   -    பொறுமையெனும்    (பெரும்)    பண்பிலிருந்து
சுரப்பனவேயன்றோ?          அருமையும்   -    உன்னுடைய
அருமையினையும்; அடர்ந்து நின்ற பழியையும்-(உன் செயலால்)
நெருங்கி வந்த பழியினையும்; அயர்ந்தாய் போல- (நீ) மறந்தாய்
போலும்!    இருமையும்  கெடுக்கல்    உற்றாய் -   இம்மை,
மறுமையெனும் இரண்டினையும் கெடுக்க