பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 559

இருந்தாய்;  நீ   என் நினைந்து என் செய்தாய்- நீ என்ன
நினைத்து என்ன செய்துவிட்டாய்?
 

பொறுமை  ஒரு   மலை. அப்பண்பிலிருந்து பல  பண்புகள்
மலையூற்றுகள்  போலச்  சுரக்கின்றன என்பது கருத்து. இம்மை,
மறுமை   இரண்டிலும்  பழி  விளையத்தக்க செயல் இராவணன்
மேல் சுக்கிரீவன் பாய்ந்த செயல் என்பது பெருமானின் கருத்து.
 

(37)
 

6932.

'இந் நிலை விரைவின் எய்தாது, இத் துணை 

தாழ்த்திஆயின்,

நல் நுதல் சீதையால் என்? ஞாலத்தால் பயன் என்? 

நம்பீ!

உன்னை யான் தொடர்வல்; என்னைத் தொடரும்  

இவ் உலகம்; என்றால்,

பின்னை என், இதனைக் கொண்டு? விளையாடி,  

பிழைப்ப செய்தாய்!'

  

இந்நிலை-  இந்த   நிலையில்; விரைவின் எய்தாது- (நீ)
விரைந்து   இங்கு  வாராமல்;  இத்துணை தாழ்த்தி  ஆயின் -
இவ்வளவு   நேரம்   தாமதித்து  இருந்தால்;   உன்னை  யான்
தொடர்வல்
- உனக்குத் தீங்கு விளைந்து  இறந்திருப்பாய் எனக்
கருதி பின்பற்றி நானும் முடிந்திருப்பேன்; இவ்வுலகம் என்னைத்
தொடரும்
  -  என்னைப்   பின்பற்றி  இவ்வுலகத்தினரும் உயிர்
நீத்திருப்பர்   என்னும்  போது,  (பின்பு); நல் நுதல் சீதையால்
என்?
-நல்ல நெற்றியினையுடைய சீதையால் தான் என்ன (பயன்?)
ஞாலத்தால்   பயன்  என்?
- இந்த உலகத்தால் தான் என்ன
பயன்? பின்னை  இதனைக் கொண்டு என்? - பிறகு, இந்தப்
படையெடுப்  பாலுந்தான்  என்ன பயன் உண்டு? நம்பீ! - சிறந்த
ஆண்மகனே!     விளையாடிப்   பிழைப்ப    செய்தாய்? -
விளையாட்டுச் செயலால் தவறான செயலைச் செய்துவிட்டாய்!.
  

ஆராயாமல்,   வருவதுணராமல்  செய்யும்    செயல்களைப்
பெருமான்  கண்டிப்பதை   இப்பாடலில்  காணலாம். நீ இல்லாது
போன   பின்பு  கிடைக்கும்  "நன்னுதல்    சீதையால்   என்?."
என்று வினவினான்.  சந்தர்ப்பச்   சூழலில்  சுக்கிரீவன் துயரமே
பெரிதென்பதால்  பெருமானின்    இந்த    வாசகத்தில்  நெஞ்சு
நெக்குருகிய  நம்பிள்ளை,  "அன்றீன்ற  கன்றிற்காக முன்பு ஈன்ற
கன்றுகளை முட்டி மோதும் தாய்ப்பசுப்போலே, சுக்கிரீவனுக்காகப்
பிராட்டியைப்  புறக்கணித்தான் என்று  வியப்பார்.  (திருவாய்ஈடு).
தண்டகாரணியத்தில், "சீதையாகிய