பக்கம் எண் :

560யுத்த காண்டம் 

உன்னை       இழந்தாலும்        இழப்பேன்;      ஆனால்,
என்னையடைந்தாரை என்றும் நான் இழவேன் என்று பெருமான்
கூறியதாக   முதல்  நூலாகிய   வான்மீகத்தில் உள்ள கருத்தை,
இடமறிந்து இங்குப் பயன்படுத்தியுள்ள  கவிஞர்  பிரானின் திறம்
போற்றத்தக்கது. "விளையாடிப் பிழைப்ப செய்தாய்" ஒப்பு "வளை
எயிற்று அரக்கரோடு வரும் விளையாட்டென்றாலும்  விளைவன
தீமையேயாம்"   (கம்ப. 2798)  "நான் மரித்தது கண்டு, அரக்கர்
மீறி உலகை நலிய, உலகத்தவரும் இறந்து என் பின்னே வருவர்"
என்பது இத்தொடர்க்கு ஒரு பழைய உரை.
 

(38)
 

சுக்கிரீவன் மறுமொழி
 

6933.

'காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன 

காட்டமாட்டேன்;

நாட்டிலே குகனார் செய்த நன்மையை  

நயக்கமாட்டேன்;

கேட்டிலேன் இன்று கண்டும், கிளி மொழி  

மாதராளை

மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன்,  

வெறுங் கை வந்தேன்.

 

காட்டிலே   -    (இவ்வாறு  இராமபிரான் கூறக்கேட்ட
சுக்கிரீவன்)    காட்டின்   கண்ணே; கழுகின் வேந்தன் -
கழுகரசனான  சடாயு;    செய்தன    காட்டமாட்டேன் -
புரிந்தவைபோன்ற    வீரச்  செயல்களைப்  புரிந்து  காட்டும்
ஆற்றல்  பெற்றேனும்    அல்லேன்;   நாட்டிலே  குகனார்
செய்த   நன்மையை
- நாட்டின் கண்ணே குகப் பெருமான்
செய்த    நன்மைச்    செயல்களைச்    செய்யவும்; நயக்க
மாட்டேன்
- விருப்பம் காட்டேன்; கிளி மொழி மாதராளை
- கிளியனைய மொழி  பேசும் சீதைப்பிராட்டியை; கேட்டிலே
நின்று கண்டும்
-  (இராவணன் கவர்ந்து செல்லும்) தீங்கினை,
(கிட்கிந்தை  மலை  மேல்)   நின்று   கண்ணாரக்  கண்டும்;
மீட்டிலேன்
-  மீட்டுத்   தந்தவனும்  அல்லேன்; தலைகள்
பத்தும்   கொணர்ந்திலேன் 
-   (இத்தீங்கினைப் புரிந்த)
இராவணனின்   பத்து   தலைகளையும் கொண்டு வந்தேனும்
அல்லேன்; வெறுங்கை வந்தேன்- வெறுங்கைகளை மட்டும்
கொண்டு வந்தேன்.
  

இராமன்   மீது   அன்பு  கொண்டு உதவி புரிந்தமையால்
சடாயுவும்   குகனும்   முறையே 'பெரிய உடையார்   என்றும்
குகப்பெருமாள்'  என்றும்   வைணவ     மரபில்   பாராட்டிக்
கூறப்படுவார்  ஆர்  விகுதி   சேர்த்து  மொழிந்தான் குகனார்
என்று. இத்தகு பெருமையாலே தான்