"குகப்பெருமாள்" எனப் பெயர் பெற்றதுமாம். கைங்கரியம் புரிவதில் இராமபக்தர் களுக்கிடையே நிலவிய சுமுகப் போட்டியை இப்பாடல் அழகுறத் தருகிறது. |
(39) |
6934. | 'வன் பகை நிற்க, எங்கள் வானரத் தொழிலுக்கு |
| ஏற்ற |
| புன் பகை காட்டும் யானோ புகழ்ப் பகைக்கு |
| ஒருவன் போலாம்? |
| என் பகை தீர்த்து, என் ஆவி அரசொடும் எனக்குத் |
| தந்த |
| உன் பகை உனக்குத் தந்தேன்; உயிர் சுமந்து |
| உழலாநின்றேன். |
| |
என்பகை தீர்த்து- என்னுடைய பகைவனான வாலியை அழித்து; என் ஆவி - எனது உயிரை; அரசொடும் எனக்குத்தந்த - என் அரசுடனே எனக்குத் தந்தவனான; உன் பகை- (உனக்கு) உன் பகைவனாகிய இராவணனை; உனக்குத் தந்தேன் - (நானே ஒழிக்காமல் நீயே அழிக்கும்படி) உனக்கே விட்டுவைத்தேன்; உயிர் சுமந்து உழலா நின்றேன்- புரிய வேண்டிய உதவியைப் புரியவேண்டியவர்க்குப் புரியாமல் (வீணே) உயிரைச் சுமந்து கொண்டு மனம் வருந்தி வாழ்கின்றேன்; வன் பகை நிற்க- (ஆதலால்) வலிய பகை (அழியாமல் அப்படியே) இருக்க; எங்கள் வானரத் தொழிலுக்கு ஏற்ற- எங்களுடைய குரங்குச் செயலுக்குத் தக்க; புன்பகை காட்டும் - அற்பப் பகைச் செயல்களில் (ஈடுபாடு) காட்டுகின்ற; யான் - நானோ; புகழ்ப்பகைக்கு ஒருவன் போலாம் - (உம்முடைய) புகழ்ச் செயல்களுக்கு (ஊறுவிளைக்கப் பிறந்த) ஒருவன் போல்வேன். |
வெல்லுதற்கரிய பகைவனை வென்று தனக்கு உயிரையும் அரசவாழ்வையும் கொடுத்த இராமபிரானுக்குக் கைம்மாறாக அவன் பகை அழிக்காது திரும்பிய தன் செயலை நினைத்து வருந்தும் சுக்கிரீவன் மனநிலையை இப்பாடலில் காண்கிறோம். |
(40) |
6935. | 'செம்புக்கும் சிவந்த செங் கண் திசை நிலைக் |
| களிற்றின் சீற்றக் |
| கொம்புக்கும் குறைந்த அன்றே, என்னுடைக் |
| குரக்குப் புன் தோள்? |