மலைக்குப் பின்புறமாக: மறையப் போனான்- மறைவதற்குச் சென்று விட்டான். |
சூரியன் மறைவு-தற்குறிப்பேற்ற அணி. ஒன்று ஒழித்து ஒன்றாதல்-இன்றும் வழங்கும் மரபுத் தொடர். "கோள் இரண்டையும் கொடுஞ்சிறை வைத்த அக்குமரன்" (கம்ப. 6568) என முன்பே சூரிய சந்திரர் சிறைப்பட்டுள்ளதனால் சூரியன் அஞ்சி மறைந்தான். |
(49) |
இராமனும் இராவணனும் தத்தம் இருக்கை சேர்தல் |
6944. | கங்குல் வந்து இறுத்த காலை, கை விளக்கு எடுப்ப |
| காவல் |
| வெங் கழல் அரக்கன் மௌலிமிசை மணி விளக்கம் |
| செய்ய, |
| செங் கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறையத் |
| தேக்கிப் |
| பொங்கிய தோளினானும், இழிந்து போய், இருக்கை |
| புக்கான். |
|
கங்குல் வந்து இறுத்த காலை-இரவு வந்து தங்கியபோது: கை விளக்கு எடுப்பது என்ன- கை விளக்கு எடுப்பது போன்று: வெம்கழல் அரக்கன்- கடிய வீரக்கழல்களையணிந்த இராவணனுடைய: மௌலி மிசை மணி விளக்கம் செய்ய- மகுடத்தின் மீது பதித்திருந்த மணிகளே இருள் அகற்றும் விளக்காக ஒளிசெய்ய: செங்கதிர் மைந்தன் செய்த வென்றியை- சிவந்த கதிர்களையுடைய சூரியன் மைந்தனாகிய சுக்கிரீவன் விளைத்த வெற்றியை: நிறைய தேக்கி-மனத்துக்குள் நிறைத்துக் கொண்டு:இழிந்து போய் - சுவேல மலையிலிருந்து இறங்கிச் சென்று: பொங்கிய தோளினானும் - பூரித்த தோள்கள் உடையவனான இராமனும்:இருக்கை` புக்கான் - தன் பாசறை வீட்டையடைந்தான். |
(50) |
6945. | என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை |
| வேந்தன், |
| நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் |
| நீள, |