கொள்க. மிகப் பலராகிய அமைச்சர்கள், சூழ்நிலையின் நெருக்கடி காரணமாக, மந்திராலோசனைக்கு அழைக்கப் பட்டிருந்தனர் என்பார். "அளந்து அறிவு அரியர் ஆய அமைச்சர்" என்றும் கொள்ளலாம். 'உளைந்தனம்' என்னும் சொல்லில் இராவணன் சோகம் உணர்க. |
(11) |
நிகும்பன் எதிரியை இகழ்ந்து கூறுதல் |
6957. | 'எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எயிலை |
| முற்றும் |
| தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்; |
| அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் |
| அன்றே? |
| உழிஞையைத் துடைக்க, நொச்சி உச்சியில் |
| கொண்டது, உன் ஊர். |
| |
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் - (நிகும்பன் இராவணனை நோக்கி) எழுபது வெள்ளம் எனக்கணக்கிடப்பட்ட குரங்குத் தொகுதிகள்;எயிலை முற்றும் தழுவின என்று- (நம் இலங்கையின்) மதில்களை முழுவதும் சுற்றி வளைத்தன என்று; செய்யத் தக்கது சமைதி போலாம்- (இனி) செய்யத்தக்கது என்னவென்று மனம் அழிந்து உள்ளாய் போலும்! உழிஞையை - நமது பகைவர் சூடியுள்ள மதில் முற்றுகைக்குரிய உழிஞைப்பூவை துடைக்க - அடியோடு அழித்தற்கு; அழுவ நீர் வேலை அன்னது - பரந்த நீர் நிறைந்த கடல் போன்றதாகிய;உன் ஊர்- உன் இலங்கைப் படை; நொச்சி உச்சியில் கொண்டது- மதில் காத்தற்குரிய நொச்சிப் பூவை உச்சியில் கொண்டதாய்; ஆயிரம் வெள்ளம் அன்றே? - (உள்ளதன் தொகை) ஆயிர வெள்ளம் அளவினது அன்றோ? |
வெள்ளம்-ஐம்பத்தேழு தானங்களையுடைய பேரெண் என்பர். உழிஞை-மதிலை முற்றுகையிடுவார் சூடும்பூ; நொச்சி மதில் காப்பார் சூடும் பூ. "எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல் ஆகும் உழிஞை" என்பது பன்னிரு படலம். "உன் ஊர்" என்பது ஆகுபெயராய் ஊர்ப்படையைக் குறித்து நின்றது. பகைவர் உழிஞைப் படையை அழிக்க இலங்கை நகரமே தன் உச்சியில் நொச்சியைச் சூடிக்கொண்டது என நயமுற மொழிந்தார். |
(12) |