பக்கம் எண் :

 அணி வகுப்பு படலம் 579

6958.

'எழு, மழு, தண்டு, வேல், வாள், இலை நெடுஞ் 

சூலம் என்று இம்

முழு முதற் படைகள் ஏந்தி, இராக்கதர் முனைந்த 

போது,

தொழுது தம் படைகள் முன் இட்டு, ஓடுவார்

சுரர்கள் என்றால்,

விழுமிது, குரங்கு வந்து வெறுங் கையால் கொள்ளும்

வென்றி!

 

எழு,  மழு,   தண்டு,  வேல், வாள்- கணைய மரமும்,
எரியீட்டியும், கதையும், வேலும், வாளும்;இலை நெடும் சூலம்
ஆதி
-  இலைத்தொழில் பொருந்திய நீண்ட சூலமும் முதலிய;
முழு  முதற்    படைகள்    ஏந்தி
-  சிறந்த  தலையான
போர்க்கருவிகளை ஏந்தி;   இராக்கதர்   முனைந்தபோது -
அரக்கர்கள்  (போர்க்களத்தில்)   போரிட  முயலும்    போது;
சுரர்கள்
-  தேவர்கள்;தம் படைகள் முன்னிட்டு- தம்முடைய
ஆயுதங்களை அரக்கர் முன் போட்டுவிட்டு; தொழுது ஓடுவார்
என்றால்
- தொழுதவாறு ஓடுவார்கள் என்றால்; குரங்கு வந்து-
குரங்குகள் வந்து;வெறும்   கையால்  -   (போர்க்கருவிகள்
பிடிக்கத்  தெரியாத)  வெறுங்கைகளால்; கொள்ளும் வென்றி
விழுமிது!
- (நம்மிடம்) அடையும் வெற்றி மிகவும் சிறந்ததுதான்!
 

விழுமிது-குறிப்புப் பொருள். குரங்குகளின்  கரங்கள் மரம்
தாவுதற்கும்,  காய்  கனியுண்பதற்கும் ஆனவை; போரிடற்கோ
கொலைக்கருவிகள்  தாங்குவதற்கோ   ஆகாதவை    என்று,
இகழ்ந்து  "வெறும்  கை" என்றான். படைக்கலங்களே வெற்றி
தருவன என்ற  நம்பிக்கையில்   திளைப்பது  அரக்கர் இனம்.
குரங்குகள் படைக்கலம்   ஏதும்    இல்லாதவை.  அறத்தின்
நாயகன் சார்பினவாகிய பாடலில் வரும் இச்செய்தி 'வேலன்று
வென்றி தருவது மன்னவன் கோல் அதூஉம் கோடாது எனின்'
(குறள் 546) என்ற குறட்கருத்துடன் இணைத்து நோக்கத்தக்கது.
 

(13)
 

மாதுலத் தலைவனான மாலி கூறுதல்
  

6959.

'ஈது இவண் நிகழ்ச்சி' என்னா, எரி விழித்து,

இடியின் நக்கு,

பூதலத்து அடித்த கையன், நிகும்பன் என்று ஒருவன்

பொங்க,