| 'வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது' |
| என்னா, |
| மாதுலத் தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் |
| சொன்னான்: |
| |
இவண் நிகழ்ச்சி ஈது என்னா - இங்கு நிகழும் நிகழ்ச்சிகள் இப்படி (ஆயினவோ) என்று; எரி விழித்து- தீயென விழித்து;இடியின் நக்கு- இடி போன்று சிரித்து; பூதலத்து அடித்தகையன் - தரையிலே அடித்த கைகளையுடையவனாய்;நிகும்பன் என்று ஒருவன் பொங்க- நிகும்பன் என்னும் பேருடைய ஒப்பற்ற வீரன் வெகுண்டு பொங்கிக்கூற;மாதுலத் தலைவன் - (அப்போது) தாய் மாமனாகிய மாலி என்னும் தலைவன்;வேதனைக் காமம்- துயரம் மிகும் காமம் என்னும் நோய்; அந்தோ வேரொடும் கெடுத்தது - ஐயகோ! அடி வேரொடும் வீழ்த்துகிறதே! என்னா - என்று; பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் - மீண்டும், அன்பினால் ஒரு வார்த்தை கூறினான். |
(14) |
6960. | 'புக்கு எரி மடுத்து, இவ் ஊரைப் பொடி செய்து |
| போயினாற்குச் |
| சக்கரம் உண்டோ, கையில்? தசமுகன் தலைகள் |
| ஆன |
| இக் கிரி பத்தின் மௌலி இன மணி இடந்து |
| கொண்ட |
| சுக்கிரீவற்கும் உண்டோ, சூலமும் வேலும் வாளும்? |
| |
புக்கு எரி மடுத்து- (இவ் இலங்கையுள்) புகுந்த தீயூட்டி; இவ்வூரைப் பொடி செய்து போயினாற்கு- இந்த நகரத்தைத் தூளாக்கிச் சென்ற அநுமானுக்கு; கையில் சக்கரம் உண்டோ? - கையில் சக்கரம் இருந்ததோ? தசமுகன் தலைகள் ஆன இக்கிரி பத்தின்- பத்து முகமுடையவன் ஆன உன் தலைகள் எனும் இந்த மலைகள் மீது; மௌலி இனமணி - (உன் தலைமீதிருந்த) மகுட மணிகள் கூட்டத்தை;இடந்து கொண்ட- பறித்துச் சென்ற; சுக்கிரீவற்கும் - சுக்கிரீவனுக்கும்; சூலமும் வேலும் வாளும் உண்டோ?- சூலப் படையும், வேல் படையும், வாட்படையும் இருந்ததோ? (என்று வினவினான் மாலியவான்). |
(15) |