பக்கம் எண் :

 அணி வகுப்பு படலம் 581

6961.

தொடைக் கலத்து இராமன் வாளி தோன்றுதல் 

முன்னம், தோன்றா

இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்தன்னை 

ஈந்து,

படைக்கலம் உடைய நாம், அப் படை இலாப் 

படையை, ஈண்ட

அடைக்கலம் புகுவது அல்லால், இனிப் புகும்

அரணும் உண்டோ?'

 

இராமன்   வாளி  - (ஆகையால்)   இராமனது  அம்புகள்;
தொடைக்கலத்துத்    தோன்றுதல்  முன்னம்
- நாணிலிருந்து
புறப்படுவதற்கு முன்பாகவே; தோன்றா இடைக்கு- கட்புலனாகாத
(தன்) இடைக்கு, அலமருதல் செய்யும் முலையினாள் தன்னை-
வருத்தம்    தருகின்ற    தனங்களையுடைய   சீதையை;  ஈந்து-
இராமனுக்குத்   தந்துவிட்டு;  படைக்கலம்   உடைய    நாம்-
போர்க்கருவிகள் பலவற்றை உடைய அரக்கராகிய நாம்; அப்படை
இலாப் படையை
- அத்தகைய  ஆயுதங்கள்   எவையும்  அற்ற
அவ்வானரப்படையை; ஈண்ட அடைக்கலம் புகுவது அல்லால்-
விரைவாகச்  சரணம் அடைவதைத் தவிர; இனிப் புகும் அரணும்
உண்டோ?
- இனித் (தீங்குவாராமல்) புகுதற்குரிய பாதுகாப்பு வேறு
ஏதும் உண்டோ? (இல்லை).
  

தொடைக்கலம்-நாண் ஆகிய  கருவி.   அறத்தின்   பக்கமே
வெற்றி   நிற்கும்   ஆதலால்,   பாவத்தின்  பக்கம் உள்ள நாம்
எத்தனை    படைக்கருவிகள்     வைத்திருந்தும்    பயனில்லை.
வெறுங்கைப் படை வெல்லப்போகிறது;   வீணாக ஆயுதம் சுமந்த
நாம்    தோற்கப்    போவது    உறுதி.   சரணம்  அடைவதே
பாதுகாப்பாகும்.   வருவதுணரும்    ஞானியாகிய    மாலியவான்
மொழிந்தான். சரணாகதி நெறியை இயலும் இடங்களில்   எல்லாம்
சாற்றும் காவியமாதலின், "அடைக்கலம் புகுவது அல்லால்  வேறு
இனிப்    புகும்  அரணும்   உண்டோ?"  என வேற்றுப்பொருள்
அணியாகக் கொள்ளுமாறும் இறுதியடியை  அமைந்துள்ள   திறம்
காண்க. "வேல் அன்று வென்றி தருவது" (திருக்: 546)   என்பதை
இப்பாடற்கருத்தோடு ஒப்பிட்டு மகிழ்க.
  

(16)
 

இராவணன் மாலியவானை அடக்குதல்
 

6962.

என்புழி மாலிதன்னை எரி எழ நோக்கி, 'என்பால் 
வன் பழி தருதி போலாம்; வரன்முறை அறியா

வார்த்தை,