பக்கம் எண் :

582யுத்த காண்டம் 

அன்பு அழி சிந்தைதன்னால், அடாதன அறையல்' 

என்றான்,

பின் பழி எய்த நின்றான்; அவன் பின்னைப் பேச்சு

விட்டான்.

 

என்புழி  -  என்று   (மாலியவான்)  சொன்னபோது; மாலி
தன்னை  எரி எழ நோக்கி
- அவனை (விழிகளில்) தீ எழுமாறு
பார்த்து;   பின்பழி   எய்த   நின்றான் - பின்னால் (பெரும்)
பழியடைய உள்ளவனான  இராவணன்;என்பால் வன்பழி தருதி
போலாம்
- 'எனக்குக்கொடிய   வசையை    விளைவிப்பது (உன்
கருத்துப்) போலும்; அன்பு அழி சிந்தை தன்னால் - என்பால்
அன்பற்ற   உன் மனத்தினால்; வரன் முறை அறியா அடாதன
வார்த்தை
- மரபு முறையறியாது  கூறத்தகாத  வார்த்தைகளைப்;
அறையல்  என்றான்
-  பேசாதே! என்று கூறினான்; அவன் -
அது கேட்ட  மாலியவான்; பின்னைப் பேச்சுவிட்டான்- அதன்
பிறகு தன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
 

சீதையை விடுத்து, இராமசேனையிடம்  சரணடைவது  கொடிய
பழி  என்பான்  "வன்பழி"  என்றான். "இடிப்பாரையில்லாத  ஏமரா
மன்னன்.   கெடுப்பார்   இலானும்  கெடும்" (திருக்: 448) என்பது
உறுதியாதலின், "பின்பழியடைய நின்றான்"  என்று   இராவணனைக்
குறித்தார்.   "செவி கைப்பச்  சொற்பொறுக்கும் பண்பு" (திருக்:389)
அற்ற இராவணனுக்கு, மாலியவான் உரைத்த ஞானமொழிகள் "வரன்
முறையறியா வார்த்தைகளாகவும் அடாதன  அறைதல்    ஆகவும்"
தோன்றின.
  

(17)
 

இராவணன், சேனையை அணிவகுக்க ஆணையிடல்
 

6963.

'காட்டிய காலகேயர் கொழு நிணக் கற்றை காலத்

தீட்டிய படைக் கை வீரச் சேனையின் தலைவ! 

தெள்ளி

ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் 

கொண்டு,

கீட்டிசை வாயில் நிற்றி, நின் பெருங் 

கிளையினோடும்.

 

காட்டிய - (பிறகு இராவணன் படைத்தலைவன் பிரகத்தனை
நோக்கி) (போரில் வீரம்) காட்டிய; கால கேயர் -  காலகேயரின்;