பக்கம் எண் :

594யுத்த காண்டம் 

துன்பங்கள் (பல) செய்தான்;பூசுரர்க்கு  அலக்கண்   ஈந்தான்
-  மண்ணுலகத்   தேவர்களாகிய       (செந்தண்மை   பூண்ட)
அந்தணர்கட்கு இன்னல் பல செய்தான்; மன்னுயிர்  புடைத்துத்
தின்றான்
- நிலை பெற்ற உயிர்களைப் பிரித்துக் கொன்று (அவை
வாழ்ந்த உடல்களைத்)     தின்றான்;   ஆசையின் அளவும் -
திக்குகளின்   எல்லை    வரையிலும்;    எல்லா உலகமும் -
(இருக்கின்ற)    எல்லா   உலகங்களையும்;தானே ஆள்வான் -
(பிறர் ஆள விடாதபடி) அவனே ஆண்டு வருகின்றான்;வாசவன்
திருவும்   கொண்டான்
- இந்திர உலகத்துச் செல்வங்களையும்
கொள்ளை  கொண்டான்; வழியலா   வழி மேற்செல்வான் -
(இவை   யாவற்றையும்விட)   நெறியல்லாத  நெறியிற்   சென்று
கொண்டுள்ளான்.
 

"இரக்கமது இழுக்கு" எனக் கூறிய தன் கருத்துக்குச் சான்று.
இது  முதல்   நான்கு பாடல்களில்  நிறுவுகின்றான் இலக்குவன்.
தேசி-கற்பின் ஒளிவடிவாகிய பெருமாட்டி சீதை. தேசு-ஒளி. தேசி
என்பதற்கு    சூரியன்    எனவும்  இந்திரன் எனவும் பொருள்
உரைப்பர்.  தேவரை-உருபு   மயக்கம்.  நான்காம் வேற்றுமைப்
பொருளில் வந்தது.
 

(4)
 

6978.

'வாழியாய்! நின்னை அன்று வரம்பு அறு துயரின்

வைக,

சூழ்வு இலா மாயம் செய்து, உன் துணைவியைப்

பிரிவுசூழ்ந்தான்;

ஏழைபால் இரக்கம் நோக்கி, ஒரு தனி இகல்மேல்

சென்ற,

ஊழி காண்கிற்கும் வாழ்நாள், உந்தையை உயிர்

பண்டு உண்டான்.

 

வாழியாய்! - அழியா  வாழ்வுடன்   என்றும்   வாழ்பவனே!
அன்று 
-  (இராவணன்  சீதையைக்  கவர்ந்த) அன்று; நின்னை
வரம்பறு துயரின்வைக
- எல்லையற்ற துன்பத்துள் நீ அழுந்துமாறு;
சூழ்விலா   மாயம்   செய்து
- (பிறரால்) எண்ணற்கும் இயலாத
சூழ்ச்சியினைச்  செய்து;  உன் துணைவியைப் பிரிவு சூழ்ந்தான்
- உன் வாழ்வின் துணைவியாகிய பிராட்டியைப் பிரித்தான்;   ஏழை
பால்
- அந்தப் பேதையாகிய பிராட்டியினிடத்தே;இரக்கம் நோக்கி
- (எழுந்த) சென்ற- தன்னந்தனியனாய்  போர்க்குச்  சென்ற; ஊழி
காண்கிற்கும் வாழ்நாள்
- பிரளயகாலத்தையும்