காணவல்ல பேராயுள் (பெற்றிருந்த); உந்தையை - உன் தந்தையாகிய சடாயுவினுடைய; உயிர் பண்டு உண்டான்- உயிரையும் முன்பு கவர்ந்தான். (இவ்விராவணன்) |
என்றும் அழியாதவன் ஆதலால், "வாழியாய்!" என்றார். |
(5) |
6979. | 'அன்னவன்தனக்கு, மாதை விடில், உயிர் |
| அருளுவாயேல், |
| "என்னுடை நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை |
| மூதூர் |
| மன்னவன் நீயே" என்று, வந்து அடைந்தவற்கு |
| வாயால் |
| சொன்ன சொல் என் ஆம்? முன்னம் சூளுறவு என் |
| ஆம்?--தோன்றால்! |
| |
தோன்றால் - புகழ் மிக்க தலைவனே! மாதை விடில்- சீதையை விட்டுவிடில்; அன்னவன் தனக்கு - அத்தகு கொடுமைகள் யாவும் புரிந்த இராவணனுக்கு; உயிர் அருளுவாயேல்- உயிர்ப் பிச்சை யளிப்பாய் ஆயின்;என்னுடை நாமம் நிற்கும் நாள் எலாம் - என்னுடைய பெயர் இவ்வுலகில் வழங்கும் காலம் எல்லாம்;இலங்கை மூதூர் மன்னவன் நீயே- இலங்கையென்னும் தொல் நகரின் அரசன் நீயே! என்று வந்து அடைந்தவற்கு- என்று உன்னைச் (சரணாக) வந்தடைந்த வீடணனுக்கு; வாயால்- (உன் சத்தியத்) திருவாயால்;சொன்ன சொல் என் ஆம்?-சொன்ன வாக்குறுதி என் ஆவது?சூளுறவு என் ஆம்?-முன், தண்டகாரண்யத்தில் முனிவர்கட்கு நீ அளித்த சபதம் (தான்) என் ஆவது? |
உடன்பிறவாத் தம்பியர் மூவருள் குகனும், சுக்கிரீவனும் இராமபிரான் சென்று அடைந்தவர்கள். வீடணன் மட்டும் இராமனிடம் வந்து அடைந்தவன் ஆதலின், அவ்வினைகளையே பெயர் ஆக்கினார். "எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய" (கம்ப. 6507) இந்த வேற்றுமையை வீடணனை ஏற்கும் போதே உரைத்துள்ளது நினைவு கூர்க. |
(6) |
6980. | 'அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால், அவற்றை |
| முற்றும் |
| மறந்தனைஎனினும், மற்று இவ் இலங்கையின் |
| வளமை நோக்கி, |