| "இறந்து இது போதல் தீது" என்று இரங்கினை |
| எனினும், எண்ணின், |
| சிறந்தது போரே' என்றான்; சேவகன் முறுவல் |
| செய்தான். |
| |
அறந்தரு தவத்தை ஆயும் அறிவினால் - அறத்தை விளைக்கின்ற பொறுமையெனும் நெறியைக் கைக்கொள்ளும் உன் புத்தியால்; அவற்றை முற்றும் மறந்தனை - வீடணனுக்கும் முனிவர்கட்கும் கூறிய உறுதிமொழிகளையும் இராவணன் இழைத்துள்ள தீங்குகளையும் முற்றும் மறந்து போனாய்! எனினும்- என்றாலும்;மற்று- மேலும்;இவ் இலங்கையின் வளமை நோக்கி- இந்த இலங்கை மாநகரத்தின் வளங்களையெல்லாம் பார்த்து; இது இறந்து போதல் தீது என்று இரங்கினை- இந்த (அழகு) நகரம் அழிந்து போவது நலமன்று என்று நினைத்து இரக்கம் கொண்டாய்; எனினும் எண்ணின்- என்றாலும் ஆராய்ந்து நோக்கின்; சிறந்தது போரே என்றான் - (இராவணனிடம் இப்போது புரிதற்குரிய) சிறந்த செயல் யுத்தமே என்றான் (இலக்குவன்) சேவகன் முறுவல் செய்தான் - (அது கேட்டுச்) சிறந்தபெரு வீரனாகிய இராமனும் புன்னகை பூத்தான். |
இலக்குவன், பிராட்டியின் நலமும், அவள் கணவனாகிய தன் நலமும் பேணுவதில் எத்தனை வேகமும் விழிப்பும் ஆர்வமும் கொண்டுள்ளான் எனும் நினைவாலும், தூது தோற்கப்போகிறது; நீ விரும்பும் போர்தான் நிகழப்போகிறது; ஆனாலும் உலகுக்காகத்தான் தூது அனுப்பப்போகிறேன்" எனும் நினைவாலும் இராமபிரான் புன்னகை பூத்தான் போலும். சேவகன்-பெருவீரன். |
(7) |
இராமன் தூது விடுப்பது நீதி நூல் முறை |
6981. | 'அயர்த்திலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் |
| ஆய்ந்த |
| நயத் துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் |
| நன்றோ? |
| புயத் துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி |
| வாழ்தல் |
| சயத் துறை; அறனும் அஃதே' என்று இவை சமையச் |
| சொன்னான். |