பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 597

அயர்த்திலென்-  (இலக்குவனை  நோக்கி)  இராவ`ணன்
தீமைகளையும்,  முனிவர்  வீடணன் ஆகியோர்க்குத் தந்த வாய்
மொழிகளையும் நான் மறக்கவில்லை;முடிவும் அஃதே-இறுதியில்
நடக்கப் போவது போரேயாகும்;ஆயினும்- ஆனாலும்; அறிஞர்
ஆய்ந்த
  - தேவகுருவான வியாழ பகவானும் அசுர  குருவான
சுக்கிராச்சாரியாரும் ஆராய்ந்து கூறியுள்ள;நயத்துறை நூலின்நீதி-
அரசியல்துறை பற்றிய நூல்களின் நீதிகளை;நாம்- (போற்றிக்காக்க
வேண்டிய) நாமே; துறந்து உறைதல் நன்றோ?-அவற்றை நீக்கி
வாழ    நினைத்தல்    நன்றாமோ?  புயத்துறை வலியரேனும்-
தோளிலே    உறையும்   வலிமை    மிக்காரே      யானாலும்;
பொறையொடும்    பொருந்தி வாழ்தல்
- பொறுமை பூண்டு
வாழ்வதே;சயத்துறை- வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும்;
அறனும் அஃதே
- அரச நீதியும் அவ்வாறே கூறுகிறது; என்று
இவை
- என்று இத்தகைய மொழிகளை; சமையச் சொன்னான்
- (இலக்குவன் மனத்தில்) பதியுமாறு இராமபிரான் கூறினான்.
 

"முடிவும் அஃதே" என்பது அரசநீதியின் முடிவாகிய தண்டம்
எனும் போரைக்குறித்தது. வியாழபகவான் எழுதிய அரசநீதி நூல்
பார்ஹச   பத்தியம்;  சுக்கிரர் எழுதியது சுக்கிர நீதி. ஆதி மனு
வரைந்தது மனுநீதி சாத்திரம். இவையெல்லாம் நயத்துறை - நீதி
நூல்கள்.     நயம் என்பது இங்கு நீதியைக் குறித்து,  அதனைச்
செயல்படுத்தும் அரச குலத்தைச் சுட்டி நின்றது.  "புயத்து உறை
வலியர்" என்பது தோள் வலிமை மிக்க  பேரரசரைக்  குறித்தது.
தோள் வலிமையினும்  பொறுமையே வலிது  என்பது இராமனின்
கருத்து.
  

(8)
 

அங்கதனைத் தூது செல்லுமாறு இராமன் பணித்தல்
 

6982.

மாருதி இன்னம் செல்லின், மற்று இவன் அன்றி

வந்து

சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே; 

ஆர், இனி ஏகத் தக்கார்? அங்கதன் அமையும்;

ஒன்னார்

வீரமே விளைப்பரேனும், தீது இன்றி மீள வல்லான்.'
 

மாருதி இன்னம் செல்லின்- முன்பு சென்று வந்த அனுமனே
மீண்டும்    சென்றால்;  இவன்   அன்றி மற்று -  அநுமனாகிய
இவனைத் தவிர வேறு (இங்கு); சாருநர் இல்லை என்பது சாரும்
அன்றே?
- வந்து போவார் (நம் படையில்) இல்லை என்ற  கருத்து
(நம்