பகைவரிடத்தில்) எழும் அன்றோ? "யார் இனி ஏகத்தக்கார்?"- (இப்போது இராவணனிடம் தூதாகச்) செல்ல வல்லவர் யார்? அங்கதன் அமையும்- (என்று இராமன் சிந்தித்து முடிவில்) அங்கதனே பொருத்தமானவன்; ஒன்னார் வீரமே விளைப்பரேனும் - பகைவர் வீரங்காட்ட அவனிடம் வந்தாரே யாயினும்; தீதின்றி மீள வல்லான் - ஒரு தீங்குமின்றி மீண்டுவர வல்லவன் (என்று இராமன் கூறினான்) |
"தீதின்றி மீளவல்லன் அங்கதன் ஆதலின் அங்கதன் அமையும்" என முடிவுக்கு வந்தான். இதனால் தான். இப்பேறு கிட்டியதை எண்ணி மகிழ்ந்த அங்கதன், "மாருதி யல்லன் ஆகில் நீயெனும் மாற்றம் பெற்றேன்" (6987) என்று பூரித்தான். தத்திதாந்த நாமம். |
(9) |
6983. | 'நன்று' என, அவனைக் கூவி, 'நம்பி! நீ |
| நண்ணலார்பால் |
| சென்று, இரண்டு உரையின் ஒன்றைச் செப்பினை |
| திரிதி' என்றான்; |
| அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல் |
| பொன் தோள் |
| குன்றினும் உயர்ந்ததுஎன்றால், மன நிலை |
| கூறலாமோ? |
| |
'நன்று' என - சுக்கிரீவன், வீடணன் முதலியோர், 'நல்லது நல்லது' என்று கூற; அவனைக் கூவி- அங்கதனை அழைத்து; நம்பி! நீ - நற்குணங்கள் அமைந்தவனே! நண்ணலார் பால் சென்று - பகைவர் பால் சென்று;இரண்டு உரையின் - நான் கூறும் இரண்டு சொற்களைச்; செப்பினை- சொல்லி;ஒன்றைத் திரிதி - அவற்றுள் அவன் இசைந்த ஒன்றை (அறிந்து) திரும்புவாயாக; என்றான்... - என்றான்; அன்று- அப்போது; அவன் அருளப்பெற்ற - அந்த இராமனால் (பணி செய்ய) அருளப்பெற்ற; ஆண் தகை - (பேராளனாகிய) ஆண்மைப் பண்புகள் அனைத்தும் அமையப் பெற்றவனான அங்கதன்; அலங்கல் பொன்தோள்- மாலை புனைந்த அழகிய தோள்கள்; குன்றினும் உயர்ந்தது என்றால்- குன்றுகளை விட உயர்ந்து ஓங்கின என்றால்; மன நிலை கூறல் ஆமோ? - அவன் உள்ளத்து உவகை நிலையை உரைக்க முடியுமோ? |
நம்பி-புருடோத்தமன், ஆண்தகை, குணபூரணன் முதலிய சொற்களின் பரியாயச் சொல். இராமபிரான் திருவாயால் 'நம்பி' |