பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 599

என்றும்,  'நான்   சொல்வதில்  இரண்டில் ஒன்று தெரிந்து வா'
என்றும்   அன்பும்    கட்டளையும் அமைய அறிவிக்கப்பெற்ற
பெருமிதப்   பேற்றால், அங்கதன்   தோள்கள்  குன்று போல்
உயர்ந்தன.
 

(10)
 

6984.

'என் அவற்கு உரைப்பது?' என்ன, 

' "ஏந்திழையாளை விட்டுத

தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்றுஎனின், 

தலைகள் பத்தும்

சின்னபின்னங்கள் செய்ய, செருக்களம் சேர்தல் 

நன்றோ?

சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக!" எனச்

சொல்லிடு' என்றான்.

 

அவற்கு உரைப்பது என் என- (அங்கதன் இராமபிரானை
நோக்கி)  (அடியேன்  சென்று)  அந்த இராவணனுக்கு உரைக்க
வேண்டியவை   என்ன  என்று விண்ணப்பிக்க;ஏந்திழையாளை
விட்டு
-   உயர்ந்த   அணிகளையணிந்த   சீதா   தேவியைச்
சிறையிலிருந்து விடுதலை   செய்து;   தன்   உயிர்  பெறுதல்
நன்றோ?
- தன்னுடைய உயிரை (இழக்காமல்) பெறுதல் நல்லதா?
அன்று எனில்
-  அல்லாது   போனால்;  தலைகள் பத்தும்-
உன்னுடைய பத்துத் தலைகளும்; சின்ன பின்னங்கள் செய்ய-
(என் அம்புகளினால்)   கண்டதுண்டமாக்கப்பட்டு; செருக்களம்
சேர்தல் நன்றோ?
-   போர்க்களத்தில்   கிடப்பது நல்லதா?
சொன்னவை
- நான் கூறியவற்றுள்; இரண்டின் ஒன்றே துணிக-
இரண்டில் ஒன்றையே தேர்ந்து சொல்லுக; எனச் சொல்லிடு -
என்று இராவணனிடம் கூறிவருக என்றான்.
  

(11)
 

6985.

'அறத் துறை அன்று, வீரர்க்கு அழகும் அன்று,

ஆண்மை அன்று,

மறத் துறை அன்று, சேமம் மறைந்து உறைந்து 

ஒதுங்கி வாழ்தல்;

நிறத்து உற வாளி கோத்து, நேர் வந்து 

நிற்கும்ஆகின்,

புறத்து உற எதிரே வந்து போர் தரப் புகல்தி'

என்றான்.