சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் - பாதுகாவலுக்காக (கோட்டைக்கு) உள்ளே மறைந்து தங்கி, ஒதுங்கி வாழ்வது; அறத்துறை அன்று - தருமமாகாது;வீரர்க்கு அழகும் அன்று - நல்லவீரர்க்கு அழகும் ஆகாது;ஆண்மை அன்று- தைரியத்தின் பாலும் சேராது; மறத்துறை அன்று- வீரத்துறையின் பால் படுவதும் அன்று; நிறத்து உற- மார்பிடத்தே தைக்குமாறு; வாளி கோத்து- அம்புகளைத் தொடுத்துக்கொண்டு; நேர் வந்து நிற்குமாகில் - எதிரே எதிர்த்து வந்து நிற்கும் வன்மையுளதென்றால்;புறத்து உற- இலங்கை நகரின் வெளியே போந்து; எதிரே வந்து- நேருக்கு நேர் நின்று; போர்தரப்புகறி - போர் புரியுமாறு புகல்வாயாக என்றான். |
(12) |
அங்கதன் இராவணன் இருக்கையடைதல் |
6986. | பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் |
| படர்வதேபோல், |
| வீரன் வெஞ் சிலையில் கோத்த அம்பு என, |
| விசையின் போனான், |
| ' "மாருதி அல்லன்ஆகின், நீ" எனும் மாற்றம் |
| பெற்றேன்; |
| யார் இனி என்னோடு ஒப்பார்? என்பதோர் இன்பம் |
| உற்றான். |
| |
மாருதி அல்லன் ஆகின் நீ- 'அநுமன் இல்லாவிட்டால் (அந்த இடத்தை நிரப்புகிறவன்) நீயே' எனும் மாற்றம் பெற்றேன்- என்று உரைக்கும் இராம வாக்கைப் பெற்றுவிட்டேன்; இனி என்னோடு ஒப்பார் யார்? - இனி எனக்கு நிகராவார் உலகில் யாருளர்?என்பதோர்-என்று சொல்லவல்ல ஒப்பற்றதொரு; இன்பம் பெற்றான் -பேரின்பத்தினை யடைந்தவனான அங்கதன்; பார் மிசை வணங்கி - (இராமபிரானை) மண் மேல் (தன் அங்கங்கள் பட) வீழ்ந்து வணங்கி; சீயம் விண்மிசைப் படர்வதே போல்- சிங்கம் (ஒன்று) வான் வழியே பாய்ந்து செல்வது போல்; வீரன் வெஞ்சிலையில் கோத்த அம்பு என- இராமபிரானின் கடிய கோதண்டம் எனும் வில்லில் பூட்டிய அம்புபோல்; விசையிற் போனான் - விரைந்து (இராவணன் இருப்பிடம் நோக்கிச்) சென்றான். |