பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 601

அனுமனை  விடுத்து  அங்கதனைத்  தேர்ந்தமைக்கு உரிய
விளக்கம்  மேல்  (6982) கூறப்பட்டது. தூதுரைத்து இராமனிடம்
மீளும்  அங்கதனுக்கு,   குறியைத்   தவறாமல் தாக்கி மீண்டும்
இராமன் தூணிக்கே  திரும்பி  வரும்   இராமபாணம்  அழகிய
உவமை. "வீரர்களுள்   நான்   இராமனாயிருக்கிறேன்"  (கீதை)
என்பது கீதையில்   கண்ணன்    கூற்றாதலால்,  இராமபிரானை,
"வீரன்  என்றார்."  அநுமன்    இல்லையேல் அங்கதன்" எனும்
பழமொழி,  இப்பாடலின்   பின்னர்த் தோன்றியிருக்க வேண்டும்.
ஆண்மைத் தோற்றத்துடன் அஞ்சாமல் செல்வதற்குச் சிங்கமும்,
தவறாமல் குறியையடைந்துதாக்கி மீளுதற்கு இராமன்   அம்பும்
உவமைகள். சீயம் விண்மிசை  படர்வது-இல்பொருள்   உவமை
அணி.
 

(13)
 

6987.

அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரைக் கடக்க,

ஆழித்

துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத  

தூதன்,

வெயில் கடந்திலாத காவல், மேருவின் மேலும் 

நீண்ட,

எயில் கடந்து, இலங்கை எய்தி, அரக்கனது

இருக்கை புக்கான்.

 

அயில் கடந்து எரிய நோக்கும் -வேற்படையினையும் தம்
விழி  வெம்மையால்     எரித்துவிட     வல்ல       கொடிய
பார்வையினையுடைய;    அரக்கரைக்   கடக்க - அரக்கர்கள்
என்னும்     (பாவக்கடலைக்)   கடந்து  (உலகோர்) கரை சேர;
ஆழித்துயில் கடந்து
  -  பாற்கடற்  பள்ளியின்  தூக்கத்தைத்
(துறந்து)    அயோத்தி    வந்தான்  - அயோத்தியில் வந்து
அவதரித்தவனாகிய இராமபிரானுடைய; சொற்கடவாத தூதன் -
மொழிகளை   (எந்நிலையிலும்)   மீறாத   தூதனாகிய அங்கதன்;
வெயில் கடந்திலாத காவல்
- சூரியன் தண்டிச் செல்ல இயலாத
கட்டுக்காவல்   மிக்கதும்;   மேருவின் மேலும் நீண்ட- மேரு
மலையினும்    உயர்வு    கொண்டதும் ஆன; எயில் கடந்து -
இலங்கையின் கோட்டை மதில்களைத் தாண்டி; இலங்கை எய்தி
-  இலங்கையை    யடைந்து;   அரக்கனது - இராவணனுடைய;
இருக்கை புக்கான்
- இருப்பிடத்தை சென்றடைந்தான்.
 

கடக்க    என்னும்   வினையால், அரக்கரைக் கடல் எனக்
கொள்ள  வைத்தார்.  ஏகதேச உருவகம். அரக்கக்கடலை உலகு
கடக்க,  தான்   ஆழிக்கடலைக் கடந்து வந்தவன் என நயமுற
உரைத்தார். கடத்தல் என்ற