பக்கம் எண் :

602யுத்த காண்டம் 

சொல்லுக்கு  அஞ்சாது  எதிர்நின்று  போர் செய்து  வெல்லுதல்
என்பது பொருள். தூதர்கள், கூறியது  கூறுவார்;  தான் வகுத்துக்
கூறுவார்   என   இருபகுப்பினர்.   இவருள் அங்கதன்  கூறியது
கூறுவான் எனும் பகுப்பினன் என்பதனையுணர்த்த, "சொற்கடவாத
தூதன்" என்றார். கண்ணனும் அநுமனும் தான் வகுத்துக் கூறுவார்
எனும்  பகுப்புள்    அடங்குவர்.  இங்கு, வள்ளுவனாரின் "தூது"
எனும்   அதிகாரமும்,  அதற்குப் பரிமேலழகர் உரையும் சிந்தை
செய்யத்தக்கவை. 
 

(14)
 

இராவணன் ஆற்றலை அங்கதன் வியத்தல்
  

6988.

அழுகின்ற கண்ணர் ஆகி, 'அனுமன்கொல்?' என்ன

அஞ்சித்

தொழுகின்ற சுற்றம் சுற்ற, சொல்லிய 

துறைகள்தோறும்

மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்தொறும் செவியின்

மூழ்க,

எழுகின்ற சேனை நோக்கி, இயைந்து இருந்தானைக்  

கண்டான்.

 

அனுமன் கொல் என்ன அஞ்சி- (அங்கதனைக் கண்ணுற்ற
அரக்கர்கள் முன்பு  வந்து போன) அனுமனோ (மீண்டு வந்தான்)
என்று    அஞ்சி;     அழுகின்ற கண்ணர் ஆகி- நீர் ஒழுகும்
கண்களையுடையவர் ஆகி;தொழுகின்ற சுற்றம் சுற்ற- தங்கட்கு
இடையூறு    அடையாமல் காத்திடுக எனக் கைதொழுது நிற்கின்ற
சுற்றத்தால் தன்னைச் சுற்றிக் கொள்ளவும்; சொல்லிய  துறைகள்
தோறும்
- அரசியலிலும் பொருளியலிலும் கூறப்பட்டுள்ள துறைகள்
யாவற்றிற்கும்;  மொழிகின்ற   வீரர்  வார்த்தை - பணியாற்றக்
கூறப்பட்டுள்ள    வீரர்களின்  விண்ணப்பங்கள்;  முகம்தொறும்
செவியின்    மூழ்க
- பத்து    முகங்களிலும்  உள்ள இருபது
காதுகளிலும்  வீழவும்;   எழுகின்ற     சேனை  நோக்கி -
இதற்கிடையில்    போருக்குப்    புறப்படுகின்ற   சேனைகளைப்
பார்வையிட்டவாறும்;    இயைந்திருந்தானை  -  அமர்ந்திருந்த
இராவணனை; கண்டான்- (அங்கதன்) பார்த்தான்.
 

அவற்றைச் செவியில் வாங்கி, நெஞ்சத்தில் ஆழ்த்தி  இராவணன்
சிந்திக்கின்றான் என்பது தோன்ற, "வீரர் வார்த்தை முகம் தொறும்
செவியின் மூழ்க" என உரைத்த   திறனை  நோக்குக.  "கண்ணிற்
சொல்லி செவியில் பார்க்கும் வல்லுநர்" என நாடாளும் மன்னரை
குமர குருபரரும் இதனால் உரைப்பர். 
 

(15)