6989. | 'கல் உண்டு; மரம் உண்டு; ஏழைக் கடல் ஒன்றும் |
| கடந்தேம் என்னும் |
| சொல் உண்டே; இவனை வெல்லத் தோற்றும் ஓர் |
| கூற்றம் உண்டே? |
| எல்லுண்ட படை கைக் கொண்டால் எதிர் உண்டே? |
| இராமன் கையில் |
| வில் உண்டேல், உண்டு' என்று எண்ணி, ஆற்றலை |
| வியந்து நின்றான். |
| |
கல் உண்டு, மரம் உண்டு - (இராவணன் ஓலக்கத்தைக் கண்ட அங்கதன் தனக்குள்) கடலைத் தூர்த்து அணைகட்டக் கற்களும் உண்டு, மரங்களும் உண்டு; (ஆதலால்)ஏழைக்கடல் ஒன்று கடந்தோம்- சிறிய இந்தக் கடல் ஒன்றைத் தாண்டி கடந்து வந்து விட்டோம்; என்னும் சொல் உண்டே! - என்ற சொல்லும் (நமக்கு வாய்த்து) விட்டது; இவனை வெல்ல- ஆனால், இந்த இராவணனை வெல்வதற்கு (ஒருவன்) தோற்றும் ஓர் கூற்றம் உண்டே.? - பிறந்துள்ளதாகக் கூறும் ஒரு சொல் எழுந்தது உண்டோ? (இல்லை) எல் உண்ட - ஒளியோடு கூடிய; படை கைக்கொண்டால்- போர்க்கருவிகளை இவன் கைகளில் ஏந்தி (களத்திற்கு வந்தால்);எதிர் உண்டே? - எதிர்த்து நிற்கும் படையும் (உலகில்) உண்டோ? இராமன் கையில் வில் உண்டேல் உண்டு!- (நம் தலைவனான) இராமபிரானின் கரங்களில் ஏந்திய (கோதண்டம் எனும்) வில் உண்டு என்றால் இவனை எதிர்த்து நிற்கும் வாய்ப்பு உண்டு! என்று எண்ணி -என்று எண்ணியவாறு;ஆற்றலை வியந்து நின்றான்- இராவணனது பேராற்றலை வியந்தபடி நின்றான். |
(16) |
6990. | 'இன்று இவன் தன்மை எய்த நோக்கினேற்கு |
| எதிர்ந்த போரில் |
| வென்ற என் தாதை மார்பின் வில்லின்மேல் கணை |
| ஒன்று ஏவிக் |
| கொன்றவன்தானே வந்தான் என்று உடன் குறிப்பின் |
| அல்லால், |
| ஒன்று இவன்தன்னைச் செய்ய வல்லரோ, உயிர்க்கு |
| நல்லார்? |