இன்று இவன் தன்மை எய்த நோக்கினேற்கு- இப்பொழுது இந்த இராவணனுடைய நிலையை நன்கு ஊன்றிக் கவனித்த எனக்கு; எதிர்ந்த போரில்- விளைந்துள்ள போரில்; என் தந்தை மார்பின்- (இவனை) வென்ற என் தந்தையாகிய வாலியின் மார்பில்; வில்லின் மேல் கணை ஒன்று ஏவி- வில்லில் கணை ஒன்று தொடுத்து; கொன்றவன் தானே- கொன்றவனான இராமபிரான் தானே; வந்தான் என்று- இப்போது இவனைக் கொல்ல வந்துள்ளான் என்று; உடன் குறிப்பின் அல்லால் - இச்செய்தியையும் உடன் சேர்த்து உணர்ந்து கொள்ளலாமே யன்றி;உயிர்க்கு நல்லார்- உயிர்க்கு நலம் செய்யக் கருதுபவர்கள்;இவன் தன்னை - இந்த இராவணனை; ஒன்று செய்யவல்லரோ? - எந்த ஒரு செயலாலும் தீங்கு செய்ய வல்ல இயலுமோ? |
வாலியை வென்ற இராமனாலன்றிப் பிறரால் இவனுக்கு, எள் முனையளவு சிறுதீங்கும் செய்து விட இயலாது என்று அங்கதன் கருதுகின்றான். இராவணன் திக்கு விசயம் செய்கையில் வாலியோடு எதிர்த்ததனால் அவன் வெகுண்டு வாலிற் கட்டியவாறு, திசைகள்தோறும் பறந்து சிவபூசனை செய்து, கிட்கிந்தை திரும்புகையில், தாரை வேண்டியபடி இராவணனை வாலிலிருந்து விடுவித்தான் என்று உத்தரகாண்டம் வாலி வாலாற் கட்டுண்ட படலத்தில் உரைக்கப்படும். "மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன், தொக்கத் தோளுறத் தொடர்படுத்த நாள்" (கம்ப. 3833) எனக் கவிஞர் பிரானாலும் இந்நிகழ்ச்சி குறிக்கப்படும். |
(17) |
6991. | 'அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்மேல் |
| வைத்த ஆசைப் |
| பிணி பறித்து, இவனை யாவர் முடிப்பவர், |
| படிக்கண்? பேழ் வாய்ப் |
| பணி பறித்து எழுந்த மானக் கலுழனின், இவனைப் |
| பற்றி, |
| மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன்' |
| என்றான். |
| |
அணி பறித்து- ஆபரணங்களைக் களைந்து (அவையின்றியே); அழகு செய்யும் - அழகு மிக விளங்கும்; அணங்கின் மேல் வைத்த ஆசை- பிராட்டியின் மீது கொண்ட இச்சையாகிய; பிணி பறித்து-(காம) நோயை வேரொடும் களைந்து; படிக்கண் இவனை - (இப்) பூமியிலே இவ்வலிய |