அரக்கனை;யாவர் முடிப்பவர் - யாரே அழிக்க வல்லார்? பேழ்வாய்- பிளந்த வாயினையுடைய; பணி பறித்து எழுந்த - பாம்பின் (மணியினைக்) கவர்ந்து கொண்டெழுந்த; மானக் கலுழனின்- பெருமைக்குரிய கருடனைப் போல; மணி பறித்து எழுந்த - இவனுடைய மகுடத்தின் மணியைப் பறித்துக் கொண்டுவந்த; எந்தை- என்னுடைய தந்தையான சுக்கிரீவன்; யாரினும் வலியன்- எல்லோரிலும் வலியவனே! என்றான் அங்கதன். |
"கூடல் மகளிர் கோலம் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அருவிலை அழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர்" (சிலம்பு. 16.9.11) என அணி அணியாக் கோலத்தோடு வந்த கண்ணகியின் அழகினை இளங்கோவடிகள் போற்றியமையை இங்கு நினைவு கூர்தல் தகும். |
(18) |
6992. | நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப |
| எண்ணி, |
| கடுங் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் |
| காட்டி, |
| விடும் சுடர் மகுடம் மின்ன, விரி கடல் இருந்தது |
| அன்ன |
| கொடுந் தொழில் மடங்கல் அன்னான் எதிர் சென்று, |
| குறுகி நின்றான். |
| |
நெடுந்தகை - பெருங்குணங்கள் நிறைந்த இராமபிரான்; விடுத்த தூதன் இனையன - அனுப்பிய தூதனான அங்கதன் இவ்வாறான நினைவுகளை;நிரம்ப எண்ணி- நெஞ்சில் நிறைய எண்ணியவனாய்;விரிகடல் - பரந்து பட்ட கடல் ஆனது; கடுங்கனல் - கொடிய தீயும்; விடமும் கூற்றும் - நஞ்சும் யமனும்;கலந்து- (ஆகிய மூன்றையும்) ஒன்றாகக்கூட்டி; கால் கரமும் காட்டி - கால்களையும் கைகளையும் உண்டாக்கிக்கொண்டு; சுடர் விடும் மகுடம் மின்ன இருந்தது என்ன- ஒளி உமிழ்கின்ற மகுடம் தன் உச்சியில் மின்னுமாறு அமர்ந்திருந்தது என்று கூறுமாறு (அமர்ந்திருந்த); கொடுந்தொழில் - கொடுமைத் தொழிலையே கொண்டுள்ள; மடங்கல் அன்னான் - சிங்கம் போன்றவனான இராவணனுக்கு;எதிர் சென்று - நேர் எதிராகப் போய்;குறுகி நின்றான்- இடைவெளி குறுகுமாறு அருகே நின்றான். |
இராவணன் தேற்றம்-இல்பொருள் உவமையணி. |
(19) |