பக்கம் எண் :

606யுத்த காண்டம் 

இராவணன் அங்கதன் உரையாடல்
  

6993.

நின்றவன் தன்னை, அன்னான் நெருப்பு எழ நிமிரப் 

பார்த்து, 'இங்கு,

இன்று, இவண் வந்த நீ யார்? எய்திய கருமம்  

என்னை?

கொன்று இவர் தின்னாமுன்னம் கூறுதி, தெரிய' 

என்றான்;

வன் திறல் வாலி சேயும், வாள் எயிறு இலங்க  

நக்கான்.

 

நின்றவன் தன்னை - (குறுக வந்து) (தன் முன்) நின்றவனான
அங்கதனை;   அன்னான்  - இராவணன்; நெருப்பு எழ நிமிரப்
பார்த்து
- விழிகளில் தீப்பொறி சிந்த நிமிர்ந்து  நோக்கி;  இங்கு
இன்று இவண் வந்த நீ யார்?
- 'இன்று  இவ்விடத்தில் என்முன்
வந்துள்ள நீ யார்? எய்திய கருமம்  என்னை? - நீ கருதி வந்த
காரியம் என்ன?இவர் கொன்று  தின்னா  முன்னம்- இங்குள்ள
பணியாளர்கள் உன்னைக் கொன்று  தின்று   விடுவதற்கு முன்பாக;
தெரியக் கூறுதி   என்றான்
-  விளக்கி   உரைப்பாயாக என்று
கேட்டான்; வன்திறல் வாலி  சேயும்  -  வலிய ஆற்றல் மிக்க
வாலியின் மகனான அங்கதனும்; வாள் எயிறு இலங்க- வெள்ளிய
பற்கள் ஒளிருமாறு; நக்கான்- இராவணனைப் பார்த்துச் சிரித்தான்.
 

அழையாமல்   அங்கதன்   நுழைந்திருப்பதும், மிக அருகில்
நெருங்கி   நிற்பதும்,  முன்  வந்து சென்ற அனுமனைப் போலக்
குரங்குருவில்   முன் நிற்பதும் இராவணன் நெருப்பெழ நிமிர்ந்து
பார்த்தற்குக் காரணங்கள் ஆயின.
 

(20)
  

அங்கதன் தன்னை யாரென அறிவித்தல்
   

6994.

'பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப்

பூமேல்

சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், 

நீ செப்பும்

வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன்,

 தான் விட்ட

தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன்'

என்றான்.