பக்கம் எண் :

608யுத்த காண்டம் 

அல்லாமல் திருமாலோ? மற்று அயன்  கொல் ஆம்?- இவர்கள்
இருவரும் அல்லாமல் நான்முகனோ?என்பார்  -  (நீ  கூறிய பூத
நாயகனாக  முதலாய)  புகழுக்குரிய    தலைவன்;  அன்றி - (உன்
தலைவன் அவர்களைப் போல்) அல்லாமல்; குரங்கு எலாம் கூட்டி
- குரங்குகளையெல்லாம்  படையென்று  திரட்டிக்கொண்டு;வேலைக்
குட்டத்தைச்   சேது    கட்டி
  -  சிறு  குட்டை  போன்ற ஒரு
கடற்பகுதியில்   அணைகட்டி;   இரங்குவான்  ஆகில்  இன்னம்
அறிதியென்று
- (அதனை ஒரு வீரச் செயலாகவும் அதனால் தன்னை
வீரனாகவும்   கருதி)    இந்த  நிலையிலும் இராவணன் செய்ததற்கு
இரங்குகின்றானா?  என்று  அறிந்து வா' என்று; உன்னை ஏவும் -
உன்னைத்   தூதனாக  ஏவியுள்ள; நரன் கொலாம்- அந்த மனிதன்
தானோ?; உலக நாதன் - உலகத்திற்கு நாயகன்? என்று கொண்டு
- என்று   சொல்லிக்கொண்டே; அரக்கன் நக்கான் - இராவணன்
எள்ளிச் சிரித்தான். 
 

(22)
 

6996.

'கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல், கரத்து 

நேமி

சங்கமும் தரித்த மால், மற்று இந் நகர்தன்னைச்

சாரார்;

அங்கு அவர் தன்மை நிற்க, மனிசனுக்காக, 

அஞ்சாது,

இங்கு வந்து இதனைச் சொன்ன தூதன் நீ 

யாவன்?' என்றான்.

 

கங்கையும்       பிறையும்     சூடும்   கண்ணுதல் -
கங்கையாற்றையும் பிறை  நிலவையும் சடையிற் சூடியுள்ள நெற்றிக
கண்ணனான   சிவபெருமான்;  கரத்து நேமி சங்கமும் தரித்த
மால்
-தன் கரங்களில் சக்கரமும் சங்கும் தாங்கிய திருமால் மற்று
இந்நகர் தன்னைச் சாரார்
- (ஆகிய இருவரும்) இந்த இலங்கை
நகருக்குள் (அச்சத்தால்) வரமாட்டார்கள்; அங்கு அவர்நிலமை
நிற்க
- அவ்வாறு அவர் நிலமையேயிருக்கையில்;  மனிசனுக்காக
அஞ்சாது
- (கேவலம்)
 

மனிதன் ஒருவனுக்காக இவ்விலங்கைக்குள் அச்சமின்றித் துணிந்து;
இங்கு வந்து
  - என்   (அத்தாணி) மண்டபத்திற்குள்  நுழைந்து;
இதனைச் சொன்ன
- இந்த வார்த்தைகளைக் கூறிய;  தூதன் நீ-
தூதனாகிய நீ;     யாவன்? என்றான்- யார்? என்று கேட்டான்
இராவணன்.
 

(23)